தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வைகோ

கூட்டணியின் ஒரு பகுதியாக, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மதிமுக-வுக்கு சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவனல்லூர், மதுராந்தகம் மற்றும் அரியலூர் சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 17, 2021, 02:13 PM IST
  • சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
    மதிமுக அறிக்கையானது சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
    திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதய சூரியன் சின்னத்தில் வைகோவின் கட்சி ஆறு இடங்களில் போட்டியிடுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வைகோ title=

சென்னை: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 க்கான தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK) தலைவர் வைகோ புதன்கிழமை வெளியிட்டார். தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு, முழு மதுவிலக்கை கொண்டுவருவது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை, எட்டுவழிச் சாலை ரத்து என பல்வேறு அம்சங்கள் மதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மதிமுக அறிக்கையானது சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. வரவிருக்கும் தமிழகத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) உதய சூரியன் சின்னத்தில் வைகோவின் கட்சி ஆறு இடங்களில் போட்டியிடுகிறது.
மதிமுக தலைவர் முதல் முறையாக திமுக தலைமையிலான முன்னணியின் ஒரு பகுதியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார். 1994 ஆம் ஆண்டில் திமுக-வுடன் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னர், வைகோ மதிமுக-வைத் துவக்கினார். 

 கூட்டணியின் ஒரு பகுதியாக, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மதிமுக-வுக்கு (MDMK) சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவனல்லூர் (ஒதுக்கப்பட்ட தொகுதி), மதுராந்தகம் (ஒதுக்கப்பட்ட தொகுதி) மற்றும் அரியலூர் சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ALSO READ: TN Elections 2021: தமிழகதில் ஏப்ரல் 6 ஆம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு:

திமுகவுடனான கூட்டணியின் ஒரு பகுதியாக 25 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் தனது அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், மதுபானக் கடைகளை மூடுவதாகவும், 500 இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கு பயிற்சியளிப்பதாகவும், நீட் தேர்வை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தது. 

மு.க. ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான திமுக, எரிபொருள் விலையை குறைப்பதாகவும், மருத்துவ நுழைவுத் தேர்வான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) ஒழிப்பதற்கான சட்டத்தைக் கொண்டுவருவதாகவும்,  வேலைவாய்ப்புகளில் மாநில மக்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்.

ALSO READ: TN election 2021: நடனப்புயல் பிரபுதேவாவின் தேர்தல் விழிப்புணர்வு பிரசார வீடியோ வைரல்

Trending News