'ஹெல்மெட் போடலைனா பைனா'; ‘நீயே ஹெல்மெட் வாங்கி குடு': இளைஞர் வாக்குவாதம்

ஹெல்மெட் அணியாததால், அபராதம் விதித்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 25, 2022, 02:29 PM IST
'ஹெல்மெட் போடலைனா பைனா'; ‘நீயே ஹெல்மெட் வாங்கி குடு': இளைஞர் வாக்குவாதம் title=

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அரசு உத்தரவிட்டு உள்ளது. வாகன விபத்துகளில் இறப்புகள் பெரும்பாலும் ஹெல்மெட் என்னும்  தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டதால் இறப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். தலைகவசம் உயிரை காக்கும் என்ற வகையில் அபல இடங்களில் விழிப்பூனர்வு பிரச்சாரங்களும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. 

இந்நிலையில், ஹெல்மெட் அணியாததால், அபராதம் விதித்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

வீடியோவை இங்கே  காணலாம்:

 

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற நாகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற நபர் ஹெல்மெட் போடாததால் அவருக்கு அபராதம் விதிக்க முயன்றனர்.

அப்போது, எனக்கு எதுக்கு பைன் போடுற, ஹெல்மெட் போடலைன்னா, பைன் போடணும்னு சட்டம் உள்ளதா உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது, அதற்கான ஆவணத்தை காட்டுங்க, என்கிட்ட ஹெல்மெட் இருந்தா போட மாட்டேனா, என்கிட்ட போட ஹெல்மெட் இல்ல, நீங்களே ஹெல்மெட் வாங்கி கொடுங்க, நான் போட்டுகிறேன், அது விட்டுட்டு எனக்கு பைன் எல்லாம் போடக்கூடாது, என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் . இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ALSO READ | தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News