Felix Gerald Bail: பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கரை கைது செய்தது. சவுக்கு சங்கரின் அந்த பேட்டியை ஒளிப்பரப்பிய ஒளிபரப்பியதாக பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் டெல்லியில் வைத்து தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பெலிக்ஸ் ஜெரால்டிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தொடர்ந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டின் Redpix யூடியூப் சேனலை மூடவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி உத்தரவிட்டார். முன்னதாக, இந்த வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்டை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே மறுப்பு் தெரிவித்திருந்தது.
ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீண்டும் மனு
இதை அடுத்து மீண்டும் ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், "நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 80 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளேன்.
சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்கமாட்டேன் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்" என கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன்பு இன்று நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவில் வழக்கறிஞர் மருதாச்சலம், உள்நோக்கத்துடன் இந்த ஆட்சேபனைக்குரிய கேள்விகளை மனுதார் (ஃபெலிக்ஸ் ஜெரால்ட்) கேட்டதாகவும், காவல்துறையில் உள்ள பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உயர் அதிகாரிகள் பெயர்களை குறிப்பிட்டு பேசியதாகவும் கூறினார்.
ஏற்கெனவே நிபந்தனை ஜாமின்
தொடர்ந்து இது போன்ற செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றும் சவுக்கு சங்கரை தூண்டும் வகையில் செயல்பட்டார் என்றும் கூறிய வழக்கறிஞர், ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே இதே போல் பேட்டியை ஒளிபரப்பிய வழக்கில் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் வழங்கிய உத்தரவாதத்தை மீறி உள்ளதாகவும் கூறினார். இதனால், ஃபெலிக்ஸின் யூ-ட்யூப் சேனலை மூட உத்தரவிட வேண்டும் எனவும் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.
'இனி இப்படி பேச மாட்டேன்'
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான்சாத்தியன், "கடந்த 80 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து வருகிறார், ஃபெலிக்ஸ். சம்பந்தப்பட்ட அந்த கருத்திற்கும் தமக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை எனவும் இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். விசாரணை முடிவடைந்துவிட்டது. இதுவரை 87 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
தனது பேச்சுக்கான விளைவு தற்போது தான் உணர்ந்துள்ளதாகவும் இனி இவ்வாறு பேச மாட்டேன் என ஃபெலிக்ஸ் உறுதியளித்தார். நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதாடினார். மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டு வாதாடினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழ்செல்வி, யூ-ட்யூப் சேனலை மூட வேண்டும் என்றும் இது குறித்து எந்த பேட்டியும் அளிக்கக் கூடாது என்று நிபந்தனையுடனும் ஃபெலிக்ஸ் ஜெரால்டை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ