லிஸ்ட்டிலே இல்லாத தேமுதிக.... நான்கு தொகுதியிலும் பின்னடைவு!!

மக்களவை தேர்தலில் தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதியிலும் பின்னடைவை சந்தித்து உள்ளது.

Last Updated : May 23, 2019, 03:48 PM IST
லிஸ்ட்டிலே இல்லாத தேமுதிக.... நான்கு தொகுதியிலும் பின்னடைவு!! title=

7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது எனவும், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் 38 மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற பெரிய கட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதில் தேமுதிகவுக்கு நான்கு மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 

இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. அதும் அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் எல்கே சுதீஷ், தான் போட்டியிட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி பெற்ற வாக்குகளை விட மிகவும் பின்தங்கி உள்ளார்.

Trending News