தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் மேல்பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை சுமார் 4 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் செல்கிறது. இந்நிலையில் பாலாற்று வெள்ளமானது மாதனூர் வழியாக வேலூர் நோக்கி பாய்கிறது. அப்படி பாலாற்று வெள்ளம் மாதனூர் தரை பாலத்தை கடக்கும் போது மாதனூர் ஊராட்சியில் வேலை செய்யும் தூய்மை பணியாளர் ஒருவர் ஊரில் சேமித்த குப்பைகளை வண்டியோடு கொண்டு வந்து பாலாற்று வெள்ளத்தில் கொட்டும் வீடியோ தற்போது சமூக வலைதங்களில் பரவி வருகிறது. இது குறித்து அங்குள்ள பொது மக்கள் தெரிவிக்கையில், மாதனூர் ஊராட்சி 9 வார்டுகளை கொண்டது. இந்த 9 வார்டுகளில் சேகரிப்படும் பிளாஸ்டிக், வீட்டுக்கழிவுகள் போன்ற குப்பைகள் தரம்பிரிக்கப்படாமல் அப்படியே நேரடியாக கொண்டு வந்து பாலாற்றில் கொண்டி வருகின்றனர் இதனால் நீர் மாசடையும் சூழல் உருவாகியுள்ளது.
ALSO READ மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கண்டனம்: வாகனங்களுடன் முற்றுகைப் போராட்டம்
தற்போது பாலாற்றில் வெள்ளம் வருவதால் நாங்கள் எல்லாம் மகிழ்ச்சியில் உள்ளோம். ஆனால் இந்தகையை செயல் எங்களுக்கு மன வேதனையை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே பாலாறு பல்வேறு காரணிகளால் அழிந்து வருகிறது இதுபோன்ற செயலால் மேலும் பாலாறு அழிவை நோக்கி செல்கிறது. குறிப்பாக இதுபோன்ற செயலை தடுக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே இச்செயலில் ஈடுபடுவது ஆதங்கத்தை ஏற்படுத்துவதாகவும். மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரித்து விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
ஆற்றில் குப்பைகளை கொட்டும் ஊராட்சி நிர்வாகம்! யார் பொறுப்பு? pic.twitter.com/cCAUyCXORr
— Jaffer Mohaideen (@jaffermohaideen) November 13, 2021
கேள்விக்குறியான திடக்கழிவு மேலாண்மை திட்டம்:
நகர, ஊரக பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மங்கும் குப்பை மங்காத குப்பைகள் என தரப்பிரித்து மங்கும் குப்பைகளை ஊரமாக மாற்றியும், மங்காத குப்பைகளை மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் நோக்கத்தோடு ஊரக வளர்ச்சித்துளையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மாதனூர் கிராமத்தில் கேள்விக்குறியாகி உள்ளது. அதற்க்கான நிதி என்ன ஆனாது என்றும் கேள்வி எழுந்துள்ளது. பாலாற்றை சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களும், குடிநீர் ஆதாரத்துக்காக ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கும் உள்ளன.
ALSO READ திருவள்ளூர் மழைநீரில் மூழ்கியிருக்கும் வகுப்பறைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR