இன்றைய செய்திகள்: தமிழக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

Today Top News: இன்றைய முக்கியச் செய்திகள் என்ன? வானிலை செய்திகள் எங்கு மழை பெய்யும்? சினிமா செய்திகள் தேர்தல் செய்திகள்

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 14, 2024, 06:31 AM IST
Live Blog

Today Latest News in Tamil: இன்றைய முக்கியச் செய்திகள் என்ன? வானிலை செய்திகள் குறித்த தகவல், சினிமா குறித்த அப்டேட், ஜோசியம், ராசிபலன்கள் அப்டேட் மற்றும் தேர்தல் செய்திகள் குறித்து பார்ப்போம்

14 November, 2024

  • 17:59 PM

    மருத்துவருக்கு கத்திக்குத்து: அரசுக்கு விஜய் கண்டனம்

    சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். 

  • 17:58 PM

    மருத்துவருக்கு கத்திக்குத்து: வழக்குப்பதிவு

    கொலை முயற்சி, கொடூரமாக தாக்குதல், மருத்துவ சேவையில் இருக்கக்கூடிய நபர்கள் மீது வன்முறை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் கிண்டி அரசு மருத்துவமனை உதவி பேராசிரியர் டாக்டர் சேதுராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் வாக்குமூலம் பெற்றிருந்த நிலையில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெருங்களத்தூரில் உள்ள விக்னேஷ் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரின் தாயார் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆவணங்கள் முழுவதுமே விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர்.

  • 17:08 PM

    மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

    கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்

  • 12:55 PM

    காலவரையற்ற வேலைநிறுத்த
    மருத்துவ மாணவர்களின் வகுப்புகளும் நிறுத்தப்பட்டு அவர்களையும் போராட்டத்தில் ஈடுபட வேண்டுகோள் விடுக்கப்படும். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இடமும் பேசி வருகிறோம். உயிர் காக்கும் சிகிச்சை மற்றும் அவசர பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணியாற்றுவார்கள் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் அறிவிப்பு.

  • 11:42 AM

    ‘அமரன்’ திரைப்படத்தின் வீடியோ பாடல்
    சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி வசூலை அள்ளி வரும் ‘அமரன்’ திரைப்படத்தின் ‘ஹே மின்னலே’ வீடியோ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

  • 11:22 AM

    புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கக் கூடாது
    பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது "ஒரு புகாரை அடிப்படையாக கொண்டு ஒரு நபரை குற்றவாளி என அரசு தீர்மானித்து வீட்டை இடிக்க முடியாது" எனக் கூறியுள்ளது.

Trending News