ஆசிரியர்களுக்கு ரூ.3000.. ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500.. பொங்கல் போனஸ்! தமிழக அரசு அதிரடி

TN Govt Announced Pongal Bonus: 2025 ஆம் ஆண்டு பொங்கலை கொண்டாடும் விதமாக மிகை ஊதியம், சிறப்பு மிகை ஊதியம் என பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு உத்தரவு.

Pongal Bonus Latest Updates: அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதுக்குறித்து பார்ப்போம்.

1 /7

பணியாளர்கள், ஆசிரியர்கள, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு உத்தரவு.

2 /7

சி மற்றும் டி பிரிவு பணியாளருக்கு பொங்கல் பரிசாக மிகை ஊதியம் வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். 

3 /7

மக்கள் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில அயராது ஒழித்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

4 /7

சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3000 ரூபாய் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

5 /7

அதேபோல தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-24 நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள் ஆகியோருக்கு 1000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

6 /7

சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதாரர்கள் ஆகியோருக்கு ரூ. 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்.

7 /7

பணியாளர்கள், ஆசிரியர்கள, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட  ரூ.163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.