மீண்டும் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பை ஏற்கும் விராட் கோலி?

Rohit Sharma: பார்டர் கவாஸ்கர் தொடரில் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி ஏமாற்றத்தை அளித்த நிலையில், அவரின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jan 2, 2025, 03:30 PM IST
  • டெஸ்ட் கேப்டனாக திரும்பும் விராட்?
  • ரோஹித் சர்மா தொடர வாய்ப்பில்லை.
  • பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியான தகவல்.
மீண்டும் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பை ஏற்கும் விராட் கோலி? title=

இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ட்ரெஸ்ஸிங் ரூமில் நடைபெறும் விஷயங்கள் வெளியில் கசியுந்துள்ளது எப்படி என்று சில மூத்த வீரர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் நடப்பது அங்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றும், வெளியில் வரக்கூடாது என்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது. இது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது.

மேலும் படிக்க | நிதிஷ் ரெட்டியை போட்டுத்தாக்க... உள்ளே வரும் இந்த வீரர் - இந்திய அணிக்கு மேலும் தலைவலி!

சிட்னியில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை தக்கவைத்துக் கொள்ள முடியும். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கு பெறுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமையும். கடந்த ஜூலை மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அதிலிருந்து இந்திய அணியின் செயல்பாடுகள் மிகவும் மோசமடைந்து வருகிறது. குறிப்பாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தொடரை இழந்தது பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது.

மேலும் கௌதம் கம்பீரால் அணியில் உள்ள அனைத்து வீரர்களுடனும் சரியான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றும், இதனால் அணியை வழி நடத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. நாளை ஐந்தாவது டெஸ்ட் நடைபெற உள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஐந்தாவது டெஸ்ட் ரோஹித் சர்மாவின் இடம் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். ஆடுகளத்தின் தன்மையை வைத்து ரோகித் சர்மா விளையாடுவாரா? மாட்டாரா? என்பது முடிவு செய்யப்படும் என்று கம்பீர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா சரியாக விளையாடாததும் இதற்கு ஒரு காரணம்.

ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததும் ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் ஓய்வு அறிவிக்காத பட்சத்தில் இனி வரும் டெஸ்ட் தொடர்களில் அவர் இடம் பெற மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலிக்கு மீண்டும் டெஸ்ட் கேப்டன் பதவியை கொடுக்கலாமா என்று பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தான் பில்டிங்கில் மிகவும் தீர்வு தீவிரமாக இருந்தார். பவுலர்கள் இடம் அடிக்கடி பேசுவது, பீல்டிங் செட் செய்வது என களத்தில் குரல் கொடுத்து இருந்தார். தற்போது டெஸ்டில் பல இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளதால் அவர்களை வழிநடத்த சரியான தலைமை வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது. ஆனால் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | இந்திய அணிக்குள் பெரும் பஞ்சாயத்து... டிரெஸ்ஸிங் ரூம் தகவல்களை வெளியே சொல்வது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News