யூடிபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் ஒருவர் அளித்த புகாரில் கோயமுத்தூர் சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்து அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அன்றைய தினமே அவரது காரில் கஞ்சா இருந்ததாக கூறி மேலும் ஒரு வழக்கு அவர் மீது தேனி மாவட்டம் பழனிச்செட்டி போலீசார் பதிவு செய்யப்பட்டு அது தொடர்பாக கைது நடவடிக்கை மேற்கொண்டனர் மேலும் இந்த கஞ்சா வழக்கில் அவரது கார் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் திருச்சி காவல்துறையினரும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர் அதேபோல தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி பத்திரிகையாளர் சந்தியா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்து அது தொடர்பாக அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து 5 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆறாவதாக ஒரு வழக்கு பதிவு செய்து அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ உடைய ஆவணங்களை போலியாக தயாரித்து அது தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டதாக சிஎம்டி அதிகாரிகள் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் இந்த புகார் தற்போது சைபர் க்ரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் மூன்றாவதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர் போலியாவணங்களை தயாரித்தல் போலி ஆவணங்கள் மூலம் பொது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான கைது நடவடிக்கை நகலும் வழக்கின் நகலும் கோவை நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மொத்தம் ஆறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருந்தார். இதனிடையே சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.இந்த நிலையில் சவுக்கு சங்கரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது சென்னை எழும்பூர் நீதிமன்றம் வளாகத்தின் வெளியே மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் பெண்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய சவுக்கு சங்கர் அழைத்து வந்த வாகனத்தின் மீது முறம் தொடப்பத்தை வைத்து தாக்குதல் நடத்தினர் மேலும் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் இதனால் எழும்பூர் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தின் உள்ளே போலீசார் சென்று.
இதனிடையே கஞ்சா வழக்கு தொடர்பாக தேனி மாவட்டம் பழனிச்செட்டி போலீசார் சாவுக்கு சங்கரின் சென்னை மதுரவாயில் வீடு திநகர் சவுக்கு மீடியா அலுவலகத்தில் 10 மணி நேரமாக அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதில் சில ஆவணங்கள் லேப்டாப்,ஆட் டிஸ்க்கள்,கஞ்சா அடங்கிய சிகரெட்கள், இரண்டு லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.மேலும் இது தொடர்பாகவும் மேலும் ஒரு வழக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ