சித்தாலபாக்கத்தில், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி எடுத்த ஆறு வாலிபர்களை போலீசார் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் தப்பிச் சென்றனர். தீவிர தேடலில், சிறுவன் உட்பட மூவர் பிடிபட்டனர். மூவரை போலீசார் தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் கத்தி பறிமுதல்.
சென்னை அடுத்த சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 9வது தெருவில், பெரும்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் லிங்கமுகிலன், சிவா இருவரும் கடந்த 6ம் தேதி காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு புதர் மறைவில் ஆறு வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர்.
அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் சோதனையில் அவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி மேற்கொண்டது தெரியவந்தது சில நாட்டு வெடிகளை தயாரித்தும் வைத்திருந்தனர். மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர்.
தொடர் விசாரணையில் அவர்கள், சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர், 4வது தெருவை சேர்ந்த யுவராஜ்(22), இந்திரா நகரைச் சேர்ந்த சரண்ராஜ்(22), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கவின்(21), யோகேஸ்வரன்(22), ஜேசுராஜ்(23), மற்றும் ஒரு சிறுவன் என தெரியவந்தது.
ரோந்து போலீசார் இருவரும் அவர்களை பிடிக்க முயன்றபோது, ஆறு பேரும் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆறுபேரையும் தேடி வந்தனர்.
மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு?
இந்நிலையில், நேற்று யுவராஜ், சரண்ராஜ் மற்றும் சிறுவர் மூவரும் போலீசாரிடம் சிக்கினர். பின், நீதிமன்ற உத்தரவின்படி, சிறுவன் சீர்திருத்தப் பள்ளியிலும், மற்ற இருவர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள கவின், யோகேஸ்வரன், ஜேசுராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய நூல்கண்டு, முட்டை, வெடி மருந்து, திரி, கருங்கல், 3 தயாரித்த நாட்டு வெடிகுண்டு, இரண்டு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தப்பிச் சென்ற முக்கிய நபர்களை கண்டுபிடித்தால் தான் யாரை கொல்லை நாட்டு வெடிகுண்டு தயாரித்தார்கள், என்பது குறித்த விவரம் தெரியவரும் என பெரும்பாக்கம் ஆய்வாளர் சண்முகம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷன்... 'ஒத்துழைக்காத காவல்துறை' - பொங்கிய பிரேமலதா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ