கலவர பூமியான கிருஷ்ணகிரி... சின்ன தூசு பிரச்னை ஜாதி மோதலாக மாறியது - நடந்தது என்ன?

Krishnagiri Caste Clash: கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல் நடந்துள்ளது. அங்கு பட்டியலின மக்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி தீ வைப்பு சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 31, 2023, 10:21 AM IST
  • அதிமுக ஒன்றிய செயலாளர் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வந்ததாக கூறப்படுகிறது.
  • அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
  • அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 23 பேர் மீது வழக்குப்பதிவு.
கலவர பூமியான கிருஷ்ணகிரி... சின்ன தூசு பிரச்னை ஜாதி மோதலாக மாறியது - நடந்தது என்ன? title=

Krishnagiri Caste Clash: கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினரும், 200க்கும் மேற்பட்ட பிற சமூக குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சோக்காடி கிராமத்தில் ஊர் பொதுவாக மாரியம்மன் கோவில் புனரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. 

அதற்காக கோவிலின் அருகே கிரானைட் கற்களை பாலிஷ் செய்யும் பணியானது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கிரானைட் கற்கள் பாலிஷ் செய்யும்போது, அருகில் உள்ள வீடுகளில் தூசி பரவுவதால் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளுமாறு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சிலர் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்டாரா அதிமுக ஒன்றிய செயலாளர்?

இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் நிலவிய நிலையில் சோக்காடி பகுதியைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சோக்காடி ராஜனுக்கும், பட்டியலின சமூக மக்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சோக்காடி ராஜனை தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றனர்.

மேலும் படிக்க | பேருந்துகளின் மேற்கூரையில் ஆட்டம்போட்ட இளைஞர்கள்!

இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் அதிகரித்த நிலையில் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டும், பட்டியலின மக்களின் வீடுகள் மீது கற்களை வீசி தாக்கியும் அங்கிருந்த ஓலைகளுக்கு தீ வைத்தும் தகராறில் ஈடுபட்டனர். இதனால் சோக்காடி பகுதியே பெரும் பதற்றத்துடன் காணப்பட்டது.

பலருக்கும் காயம்

இதை எடுத்து கிருஷ்ணகிரி டிஎஸ்பி தலைமையிலான ஏராளமான போலீசார் சோக்காடி பகுதியில் குவிக்கப்பட்டு இரு பிரிவினர் இடையேயும் சமூக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இருப்பிட பிரிவினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் ஒரு தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் மேலும் பதட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 

இந்த நிலையில் பட்டியலின சமூக மக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காரணத்தினால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் சொக்காடி கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த மோதலில் 8 பேர் காயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

23 பேர் வழக்குப் பதிவு

இதில், அதிமுக ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டியலினத்தை சேர்ந்த 6 பேரும், மாற்று சமூகத்தை சேர்ந்த 7 பேரும் என 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வன்கொடுமை தடுப்புப் பிரிவு உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் புனரமைப்பு பணியின் போது தூசு பறந்ததாக ஏற்பட்ட தகராறு சம்பவம் இரு சமூகத்தினருக்கு இடையேயான கலவரமாக மாறியது.

மேலும் படிக்க | புழல் சிறையில்தான் தீபாவளியா... டிடிஎப் வாசனுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News