ரஜினி நடத்திய கூட்டம்; பாபுலாரிட்டியை புதுப்பிக்கும் முயற்சியா; வெளிவராத தகவல்கள்

பல காலங்களாக, தான் அரசியலுக்கு வருவதாகவும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்துப் போவதாகவும், மக்கள் மத்தியில் குறிப்பாக, தனது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை விதைத்துவிட்டு, அவர்களுக்கு அழகான கனவுகளை காட்டி வந்த, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), அரசியலுக்கு வரப்போவதில்லை என்று விலகி விட்டார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 13, 2021, 12:48 PM IST
  • அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமலேயே அரசியலில் இருந்து விலகி விட்டார்.
  • நேற்று தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார்.
  • மக்கள் மன்றத்தின் பணி என்ன என்பது குறித்து நிர்வாகிகள், ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
ரஜினி நடத்திய கூட்டம்;  பாபுலாரிட்டியை புதுப்பிக்கும் முயற்சியா; வெளிவராத தகவல்கள் title=

பல காலங்களாக, தான் அரசியலுக்கு வருவதாகவும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்துப் போவதாகவும், மக்கள் மத்தியில் குறிப்பாக, தனது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை விதைத்துவிட்டு, அவர்களுக்கு அழகான கனவுகளை காட்டி வந்த, நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), கடைசியாக சென்ற வருட இறுதியில் கொரோனா காரணத்தை மேற்கோள் காட்டியும்,  தனது உடல் நிலையை காரணம் காட்டியும், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அரசியலுக்கு வராமலேயே அரசியலில் இருந்து விலகி விட்டார்.

இந்நிலையில் நேற்று தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை (Rajini Makkal Mandram) சந்தித்து கூட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தார். அதற்கு அவர் கூறிய காரணம், மக்கள் மன்றத்தின் பணி என்ன என்பது குறித்து நிர்வாகிகள், ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதை தெளிவுபடுத்தவே இந்த கூட்டம் என கூறினார்.  கூட்டத்திற்கு பின்னர் இறுதியாக அரசியலுக்கு  முற்றுப்புள்ளி வைப்பதாக கூறி என்று சிறிய அறிக்கை வெளியிட்டார். 

எனினும் இந்த கூட்டத்திற்காக அவர் கூறிய காரணங்களை தவிர வேறு சில காரணங்கள் மறைந்துள்ளன.  சில நாட்கள் முன்பு 20 நாட்கள் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த், சிகிச்சைக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள ரசிகர்களை சந்துத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ALSO READ | அரசியலுக்கு முற்றுப்புள்ளி; ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு: ரஜினிகாந்த்

இந்நிலையில், அவர் சிகிச்சை முடிந்து சென்னை வந்த ரஜினிகாந்திற்கு, சில விஷயங்கள், அவரது ஆளுமையின் ஆதிக்கம் குறைந்து வருவதை அவருக்கு உணர்த்தியது. அவரது பாபுலாரிட்டி குறைந்து வருகிறது என்பதை உணர்ந்தார் என்றே சொல்லலாம்.  சென்னையில் வந்து இறங்கிய போது வழக்கமாக அவருக்கு கிடைக்கும் உற்சாக வரவேற்பு அன்று இல்லை. சென்னை விமான நிலையத்திற்கு, மிக, மிக குறைவான ரசிகர்களே வந்திருந்தனர்.

வழக்கமாக, அவர்  எங்கேயாவது பயணம் மேற்கொண்டு விட்டு சென்னை வந்தால், அங்கு கூடியிருக்கும் கூட்டம், எழுப்பும் தலைவா, தலைவா என்ற கோஷம் விண்ணை பிளக்கும்.ஆனால், இந்த முறை 50 பேர் மட்டுமே வந்திருந்தாக கூறப்படுகிறது, அதிலும் சில ஊடகத்தை சேர்ந்தவர்கள். 

தனது ரசிகர்கள் மத்தியில், தனக்கான ஆதரவு சரிந்து வருவதை அறிந்து கொண்டதால், அதை தூக்கி நிறுத்த அவர் மேற்கொண்ட முயற்சி இது என கூறப்படுகிறது. ஏனெனில் தனது அண்ணாத்தே படம் வெற்றி பெற ரசிகர்கள் ஆதரவு வேண்டும். ரஜினிகாந்த் அரசியலுகு வருவார் என்ற கனவுடன் இருந்த ரசிகர்கள், மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் தனது கை காசை செலவழித்து, கையை சுட்டுக் கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாது, ரஜினியின் அறிவிப்பால் பொது வெளியில், அவர்கள் பல அவமானங்களை, தர்ம சங்கடங்களை சந்தித்தனர். 

அதனால், உற்சாகம் இழந்துள்ள ரஜினி ரசிகர்களை, உற்சாகப்படுத்தினால் தான் தனது அண்ணாத்தே படம் ஓடும் என்பதால், அர்வர் தனது ரஜினி ம்க்கள் மன்ற கூட்டத்தை அழைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.  அந்த கூட்டத்திற்கு, அவர் எதிர்பார்த்த அளவில் நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ | Rajinikanth: 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி ரிலீஸ்; படக்குழு அறிவிப்பு

 

Trending News