மருத்துவமனைகளை தயார் நிலையில் வையுங்கள் - மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு

அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 22, 2022, 04:07 PM IST
  • அதிகரிக்கும் கொரோனா வைரஸ்
  • மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்
  • மருத்து கல்வி இயக்குனரின் உத்தரவு
மருத்துவமனைகளை தயார் நிலையில் வையுங்கள் - மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு title=

கொரோனாவின் மூன்று அலைகள் ஓய்ந்திருக்கின்றன. இதனால் மக்கள் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர். இருப்பினும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் சராசரி கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது..

இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் அரசுகளுக்கு சில நாள்களுக்கு முன்பு கடிதம் எழுதினார்.

Corona

இதற்கிடையே தமிழ்நாட்டில் முகக்கவசத்தை அனைவரும் அணிய வேண்டுமெனவும் அப்படி அணியவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமெனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்திருப்பதால் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

மேலும்  படிக்க | தொடர் மின்வெட்டு - சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி விளக்கம்

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார். 

மேலும், கொரோனா வார்டுகளை மறுக்கட்டமைப்பு செய்வதுடன் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதி, மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க | மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்...மாற்றி மாற்றி பேசும் அரசு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News