திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? மோடியின் பேராசை பலிக்காது - கார்த்தி சிதம்பரம்

காங்கிரசுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளும் என்ற மோடியின் பேச்சு பேராசை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 10, 2024, 08:16 AM IST
  • திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையாது
  • பிரதமர் மோடி பேராசையுடன் பேசுகிறார்
  • சென்னையில் கார்த்தி சிதம்பரம் பேட்டி
திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? மோடியின் பேராசை பலிக்காது - கார்த்தி சிதம்பரம் title=

சென்னை சூளைமேடு கில் நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பங்கேற்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அவர், " நிறம் தொடர்பாக சர்ச்சைக் கருத்தை தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார். அவருடைய கருத்துக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரும் அவருடைய பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

மேலும் படிக்க | கரூரில் கடும் வெப்ப அலை... மதிய நேர வேலைக்கு விலக்கு அளிக்க கோரிக்கை..!!

காங்கிரஸ் கட்சி குடியரசு தலைவர் தேர்தலின் போது குடியரசுத் தலைவரின் நிறம் மற்றும் தோல் ஆகியவற்றின் காரணமாகத்தான் வாக்களிக்கவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பாஜக மோடி மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது. அது ஒரு கொச்சையான குற்றச்சாட்டு. திமுகவுடன் காங்கிரஸ்  கூட்டணியை முறித்துக் கொள்ளும் என்ற மோடியின் பேச்சு என்பது ஆசை, பேராசை. தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுகவும் ஒற்றுமையாக உள்ளது. 39 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறும். 

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண விவகாரத்தில் அது கொலையா? தற்கொலையா? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை தொடங்கி ஓரிரு நாட்களே ஆவதால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. நிச்சயமாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். ஜெயக்குமார் மரண விவகாரத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக கருத முடியாது. இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் இரண்டு மாதம் தேர்தல் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை யோசிக்க வைக்கிறது" என்றார்.

மேலும் படிக்க | வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்படாத சிசிடிவி..பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News