Tamil Nadu Assembly Election 2021 Results: தமிழகம் உட்பட நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
தமிழகத்தின் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார்.
முன்னதாக, கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடந்தது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த போட்டியிட்டார். பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறங்கினார். இவர் சென்ற முறை வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 6 தேதி நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 68.80 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. சமீபத்திய தகவல்களின் படி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் 24,218 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் 13,482 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பல சுவாரசிய போக்குகளைக் காண முடிகிறது. தமிழகத்தின் பல அமைச்சர்கள் பின்னடவை சந்தித்து வருகின்றனர்.
- வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
- விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சிவி சண்முகம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.
- ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பாண்டியராஜன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
- நன்னிலம் தொகுதியில் காமராஜ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
- ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.
- மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் பின்னடைவில் உள்ளனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR