விரைவில் 2019 மக்களவை தேர்தல் வர உள்ளதால், தமிழகத்தில் திமுக தங்களுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது. மேலும் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ரூ.1000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் மார்ச் 1 ஆம் நாள் முதல் மார்ச் 7 ஆம் நாள் மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் வழங்கிட வேண்டும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் விருப்பமனுக்களை அளித்து வருகின்றனர். அந்தவகையில் இன்று திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்பமனுவை தற்போதைய ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தாக்கல் செய்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்மூலம் தனது சுமார் 12 வருட அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக கனிமொழி தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.