மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது வீட்டில் கீழே தள்ளப்பட்டார். பிறகே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பி.எச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து பி.எச்.பாண்டியன் கூறியதாவது:-
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ., மரணம் தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் டிஸ்சார்ஜ் அறிக்கையும் இடம் பெற்றுள்ளது. அதில் பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் இன்று விளக்கம் அளித்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்பல்லோ டாக்டர்கள் இன்று விளக்கம் அளித்தனர்.
சென்னை: ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் விளக்கம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து வந்த வதந்திகள் பரவி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெயலலிதாவிற்கு சிறப்பு மருத்துவம் அளித்த ரிச்சர்ட் பியல் உள்ளிட்ட மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் தான் வந்தார், தேர்தல் ஆவணங்களில் சுயநினைவுடன் தான் கைரேகை வைத்தார் என அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பற்றிருந்தார். கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணமடைந்தார்.
பின்னர் எம்.ஜி.ஆரின் சமாதிக்கு பின்புறம் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி (வயது 82) இன்று அதிகாலை சென்னையில் காலமானார்.
துக்ளக் இதழின் ஆசிரியர், நடிகர், பிரபல எழுத்தாளர் என தன்மை கொண்டவர் சோ ராமசாமி. சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
ஜெயலலிதாவும், சோ ராமசாமி நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். அரசியலில் ஜெயலலிதாவுக்கு சோ ராமசாமி ஒரு சிறந்த ஆலோசகாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு இன்று மாலை மாற்ற்ப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக் டர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவ குழுவினருடன், லண்டனில் இருந்துவந்த மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே,தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நிபுணர் மருத்துவர் கில்நானி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.