திமுக தலைவர் கருணாநிதி-யுடன் கமலஹாசன் சந்திப்பு!

பரபரப்பான அரசியல் சூழலில் திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி அவர்களை நடிகர் கமலஹாசன் இன்று சென்னை கோபாளபுர இல்லத்தில் சந்தித்தார்!

Last Updated : Feb 18, 2018, 09:17 PM IST
திமுக தலைவர் கருணாநிதி-யுடன் கமலஹாசன் சந்திப்பு! title=

பரபரப்பான அரசியல் சூழலில் திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி அவர்களை நடிகர் கமலஹாசன் இன்று சென்னை கோபாளபுர இல்லத்தில் சந்தித்தார்!

வரும் பிப்.,21 அன்று தனது அரசியல் பயணத்தினை துவங்கவுள்ள நடிகர் கமலஹாசன் தொடர்ந்து தமிழக தலைவர்கள் பலரையும் சந்தித்து, தனது மதுரை மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது, திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களை அவரது கோபாளபுர இல்லத்தில் வைத்து சந்தித்தார். தனது அரசியல் பயணத்திற்கான ஆசி பெறவும், மதுரை மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

முன்னதாக நேற்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்களை நடிகர் கமல் சந்தித்தார். இதனையடுத்து இன்று பிற்பகல் நடிகரும் தனது நண்பருமான ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News