தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 2019 மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடிக்க உள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சாத்தூரில் தங்கள் கட்சி வேட்பாளர்களான விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் முனியசாமி மற்றும் சாத்தூர் சட்டமன்ற வேட்பாளர் சுந்தராஜன் அவர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை மேற்க்கொண்டார்.
அப்பொழுது அவர் நீட் தேர்வு குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, சாத்தூருக்கு என் வணக்கங்கள். மக்கள் இங்கு கூடி இருப்பது மாற்றம் வரவேண்டும் என்பதற்காக தான். நான் என்ன காரணத்திற்காக வந்ததேனோ, அதே காரணத்திற்காக தான் நீங்களும் வந்துள்ளீர்கள். நாம் இருவரும் ஒரே பக்கம். ஒரே கட்சி.
நாங்கள்தான் நீட்டிக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தோம். அதனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என சில கட்சிகள் கூறுகிறார்கள். அவர்கள் அப்படி கூறுவது நல்ல விஷயம்தான். நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை டெல்லியில் இருந்து வந்து நீக்கி... வேண்டாம் என்று சொல்லுவதை விட, இதை முன்னாலே செய்திருக்கலாம். எங்கள் பொண்ணு சாகுவதற்க்கு முன்னால் செய்திருக்கலாம். சரி கேட்கிறேன்... நீங்கள் சொல்வது போல நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டும் தமிழ்நாடு முன்னேறி விடுமா? உங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி நீட் தேர்வை எடுத்துவிட்டால் தமிழகம் முன்னேறிவிடுமா?
படிக்கின்ற பிள்ளைக்கு நல்ல சோறு வேண்டாமா? நல்ல குடிநீர் வேண்டாமா? அதை எல்லாம் இவர்கள் ஏற்ப்பாடு செய்ய மாட்டார்கள். ஆனால் நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி மட்டும் பேசுவார்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழகமே நீட் தேர்வை எதிர்த்து பேசி வரும் நிலையில், கமல்ஹாசன் இத்தகைய பேச்சு மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.