கள்ளக்குறிச்சியில் சில நாள்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்தார். தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்ட சூழலில் உடற்கூராய்வின் மூலம் அது தற்கொலை இல்லை என சொல்லப்படுகிறது.
இந்தச் சூழலில் தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் இல்லையென்றால் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கிளப்பினார். அதனைத் தொடர்ந்து இன்று சாலை மறியல் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டம் கலவரமாக மாறியதில் காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
நிலைமை இப்படி இருக்க, மாணவியின் இறப்புக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்று நடந்த கலவரத்துக்கு ஸ்ரீமதியின் தாய்தான் காரணமென்று பேசி பள்ளி செயலாளர் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மாணவி இறந்த நாளும் மாணவியின் தாயார் சொல்லும் நாளும் வேறுபடுகிறது. மாணவி இறந்த செய்தி கேட்டு மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,என்னுடைய மகள் 10ஆம் தேதி என்னுடன் தொடர்புகொண்டு பேசினார் 13ஆம் தேதி இறந்து விட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது ஆனால் அதற்கு முன்பாகவே மாணவி இறந்துவிட்டார் என அந்த தாயார் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் தாயாரிடம் பள்ளி நிர்வாகமோ, அரசு அதிகாரிகளோ,அரசோ அறுதல் தெரிவிக்கவில்லை,மாணவியின் தாயாரை நேரில் சந்தித்து அரசு சார்பில் பேசியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு முதல்வர் ஸ்டாலின்தான். அவர் தலைமையில்தான் காவல்துறை உள்ளது ஆனால் மூன்று நாட்களாக மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. இன்று கடலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை முன்னாள் மாணவன் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்துள்ளார் நட்பு ரீதியில் அந்த பிறந்தநாள் விழாவிற்கு சென்ற மாணவியை மிரட்டி 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
நீண்ட நாட்களாக தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை சொல்லிவந்தேன். தற்போது இந்த சம்பவங்கள் அதனை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன” என்றார்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை - உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ