தருமபுரியில் விதைச்சா தமிழ்நாடு முழுக்க விளையும் - முதலமைச்சரின் பஞ்ச்

தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுக்க விளையும் என்ற நம்பிக்கை இருப்பதால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை அங்கு தொடங்கி வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 24, 2023, 02:43 PM IST
  • கலைஞர் உரிமைத் தொகை திட்டம்
  • தருமபுரியில் தொடங்கி வைத்த முதலமைச்சர்
  • பெண்கள் முன்னேறுவார்கள் என நம்பிக்கை
தருமபுரியில் விதைச்சா தமிழ்நாடு முழுக்க விளையும் - முதலமைச்சரின் பஞ்ச் title=

தமிழ்நாடு அரசின் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பயனாளிகளிடம் நேரடியாக உரையாடிய அவர், பின்னர் விழாவில் பேசினார். அவர் பேசும்போது, " கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தமிழகம் முழுமைக்கான திட்டமாக இருந்தாலும், 34 ஆண்டுகளுக்கு முன்னர் 1989-ம் ஆண்டு கலைஞர் மகளிர் சுய உதவி குழு திட்டத்தை தொங்கி வைத்தார். கலைஞர் அவர்கள் விததை்த திட்டத்தால்தான், 4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் தமிழகத்தில் இருந்து வருகிறது. அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த திட்டத்திற்கு விதை போட்ட மண் இந்த தருமபுரி மண். தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் முளைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மகளிருக்கான உரிமை தொகை வழங்கும் திட்டத்ததை இங்கு துவங்கி வைத்திருக்கிறோம். 

மேலும் படிக்க | கிளிசரின் போட்டு கண்ணீர் வடித்தவர் எங்கே? குஷ்பூவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி

நிதி நிலைமை மோசமாக நெருக்கடி நிலையில் இருந்த நிலையில் கோட்டைக்கு சென்ற முதலில் இட்ட கையெழுத்து மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி.  மகளிர்கள், மாணவிகளுக்கு என சிறப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் சேர்ந்து சத்துணவை வழங்கியவர் தான் கலைஞர். காலை சிற்றுண்டி உண்ணாமல் காலை நேரத்தில் பசியோடு வரும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.  மாணாக்கர்கள் பயன்பெற்று வந்த திட்டதினை விரிவுபடுத்தபடவுள்ளது. இதனால் 18 லட்சம் மாணாக்கர்கள் பயன்பெறுவார்கள்.

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி இப்போது நிறைவேற்றபட்டிருக்கிறது. சிறு வியாபாரம், வணிகம் செய்து பிழைப்பு நடத்தும் பெண்கள், விளிம்பு நிலை பெண்கள் என யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் தேவைப்படுமோ அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும். செப்டம்பர் 15 ம் தேதி பெண்களுகளின் கைகளுக்கு உரிமை தொகை வழங்கபடும்.  மகளிர் உரிமை தொகை திட்டத்தினை பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. தவிர கொரோனா தொற்றால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அதையெல்லாம் கடந்து, இந்த திட்டத்தை நிறைவேற்றி காட்டுவேன். நம்பிக்கையோடு வாக்களித்தவர்க்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே நல்லாட்சி வழங்குவோம். 

பெண்கள் சுய மரியாதையோடு வாழ இந்த திட்டம் பெரும் துணையாகவும் உதவியாக இருக்கும். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் வாங்க சிறப்பு முகாம்கள் துவங்கபட்டிருக்கிறது. விடுமுறை தினமான சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளிலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது. தகுதியுள்ள பயனாளிகள் யாரும் விடுப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது.

 எல்லோருக்கும் எல்லாமும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சம வளர்ச்சி என்பது அடிக்கடி நாங்கள் உணர்த்துகின்றோம். அனைத்து சமூக வளர்ச்சிக்கு அடையாளம் தான் இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம். இதன் மூலமாக தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பெண்களுடைய வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களின் குடும்பங்களில் வளம் பெருகும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஒற்றை கையெழுத்து ஏற்பட்டுள்ள புரட்சிதான் இந்த புரட்சி. இத்தகைய சாதனை சரித்திரம் தொடரும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | Manipur Video: அரசு ஒன்றும் செய்யவில்லை... மனவேதனையை பகிர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News