வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது கஜா புயலாக மாறியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. வடமேற்கு திசையைநோக்கி நகர்ந்து வரும் கஜா புயல், 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.....
இன்று அதிகாலை 5.30 மணியளவில் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. மேலும் 12 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் சென்னையில் இருந்து 990 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த புயலால் வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது வட தமிழகம்- தெற்கு ஆந்திராவுக்கு இடையே கரையை கடக்கும். வரும் 15 ஆம் தேதி இந்த புயல் கரையை கடக்கும் என்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் ஈவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா என்றால் யானை என்று பொருள். இந்த பெயரை இலங்கை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.