இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் அண்மையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நர்சரி பள்ளி இயக்க தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ALSO READ | 5 நாட்களில் குணமாகும் ஒமிக்ரான்..! ஆனால் எச்சரிக்கை அவசியம்..!
இதனால், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்திருந்தது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பி.மூர்த்தி, மதுரையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுபோட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மதுரை செட்டிகுளம் கிராமத்தில் கூட்டுறவுத் துறை சார்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முதலமைச்சர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என உறுதியளித்தார். மேலும், கட்டுபாடுகள் கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்தே இருக்கும் எனக் கூறிய அவர், இது தொடர்பாக சுகாதாரத்துறை அளிக்கும் வழிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ALSO READ | போராட்டத்தில் அசர வைத்த பகுதி நேர ஆசிரியர்..! கோரிக்கை நிறைவேறுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR