திருவண்ணாமலை மாவட்டம் , புலி வாந்தல் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அண்றாடம் பிழைப்பிற்கு கூலி தொழில், சிக்கு முடி விற்கும் தொழில் என அல்லாடி வாழ்ந்து வருகின்றனர்.
சொந்தமாக வீடு வாசல் இல்லாமல், தினசரி உணவுக்கே கஷ்டபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வருபவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய போஸிஸாரே, கூடுதல் பிரச்சனையாக அமைந்துள்ளனர் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் தரப்பில் புகார் அளித்து வருகின்றனர்.
அண்மையில், புலி வாந்தல் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராஜகிளி அவரது உறவினர் கார்த்திக் ஆகிய இருவரை நள்ளிரவில் போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்யும் ரஜினி?!
இதுகுறித்து ராஜகிளியின் மனைவி சங்கீதா மற்றும் அவரது உறவினர்கள் உத்திரமேரூர் காவல் நிலையம், பெருநகர காவல் நிலையங்களில், சென்று கேட்ட பொழுது போலீசார் அவ்வாறு யாரையும் அழைத்து வரவில்லை என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட கண்கானிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை சமர்ப்பித்தனர்.
அந்த புகாரில், சிக்கு முடி வியாபாரம் செய்து பிழைத்து வரும் தங்களை போலீசார் அடிக்கடி வந்து பொய்யான பல திருட்டு வழக்குகளில் சம்பந்தப்படுத்தி, தங்களின் உறவினர்களை அழைத்துச் செல்வதாகவும், திருட்டு நகைகளுக்கு ஈடாக தாங்கள் வைத்துள்ள அரை சவரன், ஓரு சவரன் என உள்ள பொருட்கள் அனைத்தையும் அடாவடித்தனமாக போலீசார் பறிமுதல் செய்து கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உணவு பொருட்களையும் வீட்டிலிருந்து போலிஸார் சூறையாடி செல்வதாகவும், இதனால் குழந்தைகளுக்கு கூட எதும் வாங்கி வைக்க முடியவில்லை எனவும் புகார் கூறினர்.
இதேபோல் வீட்டினுள் படுத்திருப்பவர்களையும் சட்டையை பிடித்து காரணம் கூறாமல் கூட்டிச்செல்வர் என்றும் பழங்குடியின பெண்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக பழங்குடியின மக்களான தங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் உள்ள பெண்களும், குழந்தைகளும் பெரிதும் சிரமப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? எப்படி சரிப்பார்ப்பது
ஜெய் பீம் திரைப்பட பாணியில் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள திருட்டு வழக்குகளை முடித்து வைக்க, பொய்யான வழக்கு போட்டு தங்களின் கணவர்களையும், உறவினர்களையும் கைது செய்யும் போலீசாரின் நடவடிக்கையைத் தடுக்கக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி இன பெண்கள், குழந்தைகள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நேரில் வந்து புகார் மனு அளித்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR