TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன?

Tamil Nadu Budget 2024-25: தமிழ்நாடு பட்ஜெட் உரையில் தென்மாவட்டங்களுக்கு பல தலைப்புகளின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த முழு விவரத்தை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 19, 2024, 12:59 PM IST
  • ஆறு, கடல் ஆகியவற்றை பாதுகாக்க பல திட்டங்கள் அறிவிப்பு
  • ஜவுளி பூங்காக்கள் அமைக்கவும் திட்டங்கள் அறிவிப்பு
  • டைடல் பார்க் அமைக்கவும் திட்டங்கள் அறிவிப்பு
TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன? title=

Tamil Nadu Budget, Jackpot For South Districts: 2024-2025  நிதியாண்டுக்கான நிதிநிலை (TN Budget 2024-25) அறிக்கை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசால் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்முறை பட்ஜெட்டை தாக்கல் செய்த தங்கம் தென்னரசு தனது உரையை இன்று காலை 10 மணிக்கு தொடங்கினார். இந்த உரையில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிவிப்பு போன்றவை இடம்பெற்றிருந்தன. 

அந்த வகையில், தமிழ்நாடு பட்ஜெட் உரையில் தென்மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகியவைக்கும் பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எந்ததெந்த திட்டங்கள் எந்தெந்த மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன, அவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இதில் காணலாம். 

பசுமைவழிப் பயணம் - தென் மாவட்டங்கள்

பசுமைவழிப் பயணம் என்ற தலைப்பின்கீழ் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டின் முதன் நதிகள் புனரமைப்புக்கான திட்ட அறிக்கை  தயாரிக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதில் தென்மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரங்களான வைகை (மதுரை), தாமிரபரணி (திருநெல்வேலி) ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் காவிரி (ஈரோடு, திருச்சி), நொய்யல் (கோவை, திருப்பூர்) ஆகியையும் இடம்பெற்றுள்ளன. 

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட் 2024: குடிசையில்லாத் தமிழ்நாட்டுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம்

இராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  நீலக் கொடி கடற்கரைச் சான்றிதழை பெற தமிழ்நாட்டின் கடற்கரைகள் மேம்பாடும் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் 8 கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் மூன்று தென் மாவட்டங்களாகும். ராமநாதபுரத்தின் அரியமான் கடற்கரை, தூத்துக்குடியின் காயல்பட்டினம் கடற்கரை, திருநெல்வேலயின் கோடாவினை கடற்கரை ஆகியவை ஆகும். இதற்கு 8 கடற்கரைகளுக்கும் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தேர்வுகளுக்கான பயிற்சி

1,000 நபர்களுக்கு ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது, இது ஆறு மாத உறைவிடப் பயிற்சியாகும். இது சென்னை, கோவை மாவட்டங்களில் மட்டுமின்றி மதுரையிலும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக, மொத்தம் ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஜவுளிப் பூங்கா

ரூ. 2,483 கோடி மதிப்பில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது சேலத்தில் மட்டுமின்றி தென் மாவட்டமான விருதுநகரிலும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 2.08 லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. சிறிய ஜவுளிப் பூங்காக்களும் விருதுநகரில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

அறிவுசார் பொருளாதாரம் 

மாபெரும் 7 தமிழ் கனவுகள் என்ற பெயரில்தான் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த 7 கனவுகளில் அறிவுசார் பொருளாதாரமும் ஒன்றாகும். தூத்துக்குடியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்திப் பூங்கா அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் குறு - தொழில் தொகுப்புகள் வழங்கும் மாவட்டங்களில் விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், 5 மாவட்டங்களில் இலவச Wifi வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் மதுரை மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, சேலம் ஆகியவையும் உள்ளன. மேலும், மதுரையில் 6.4 லட்சம் சதுர அடியில் ரூ.345 கோடியில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், நியோ டைடல் பூங்காக்கள் 5 மாவட்டங்களில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர் ஆகியவை மற்ற மாவட்டங்களாகும். இதில் மொத்தம் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 

மேலும் படிக்க | தமிழக பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வெளியாகியுள்ள சூப்பர் அறிவிப்புகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News