Tamil Nadu: பாஜக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

அதிமுக உறுப்பினரும் முன்னாள் தமிழக பால்வளத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 9, 2021, 12:03 PM IST
Tamil Nadu: பாஜக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?  title=

சென்னை: அதிமுக உறுப்பினரும் முன்னாள் தமிழக பால்வளத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.   

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ராஜேந்திர பாலாஜி (Rajendra Balaji). 2016 தேர்தலிலும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்று பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.  

2021 தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் நின்று தோல்வியைத் தழுவினார்.  கடந்த இரண்டு முறை ஆட்சி அமைத்த அதிமுகவும் இம்முறை தோல்வியைத் தழுவி திமுக (DMK) புதிய ஆட்சி அமைத்தது.  

ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி செயல்பட்டு வந்த திமுக அரசு தற்போது தொற்று எண்ணிக்கை குறைத்து வருவதால் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை கையில் எடுத்துள்ளது.  சமீபத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்தறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  

ALSO READ: 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் வளத்துறை அமைச்சராக இருந்த போது ஆவின் பணியாளர் நியமனங்களில் பல்வேறு ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் வெளிவந்தன.  இந்நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாகவும், இதற்காக டில்லி சென்றுள்ளதாகவும் தகவல்கள் வந்தன.  

"ராஜேந்திரபாலாஜி குறித்து திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன; அவர் அதிமுக-வில்தான் உள்ளார், பாஜகவில் இணைய மாட்டார்” என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) கூறியுள்ளார். 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .

ALSO READ: தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News