’மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியா’ மயில்சாமி அண்ணாதுரை தகவல்

இந்தியாவில் இருந்து மனிதனை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டம் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 18, 2021, 01:29 PM IST
’மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியா’ மயில்சாமி அண்ணாதுரை தகவல் title=

பொள்ளாச்சியை அடுத்த கோதவாடி பகுதியில் 152 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பும் தருவாயில் உள்ளது. தனது சொந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பும் தருவாயில் உள்ள குளத்தை மயில்சாமி அண்ணாதுரை குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா திட்டம் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

ALSO READ | தமிழக அரசின் அறிவிப்புக்கு பா.ஜ.க வரவேற்பு!

இதேபோல், விண்வெளி மற்றும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டமும் உள்ளதாக கூறிய அவர், ஒவ்வொரு திட்டமும் படிப்படியாக நடைபெறும் எனக் கூறினார். விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் வெற்றிபெற்றவுடன், நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்கான பணிகள் தொடங்கும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். இந்த திட்டங்களுக்கு முன்பாக ஆளீல்லா களங்களை விண்வெளிக்கு அனுப்பபட உள்ளதாக அவர் கூறினார். 

இந்த சோதனைகளில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு அடுத்தக்கட்ட முயற்சி மற்றும் மனிதர்களை அனுப்புவதற்கான திட்டம் வடிவமைக்கப்படும் கூறிய அவர், இஸ்ரோவின் திட்டங்கள் செயல்படுத்துவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறினார். மயில்சாமி அண்ணாதுரை கோதவாடி பகுதியில் இருக்கும் ஏரியை காணவரும் செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள், ஏராளமானோர் அங்கு கூடினர். ஏரியில் நிறைந்திருக்கும் தண்ணீரை பார்த்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

ALSO READ | சென்னை-பெங்களூரு சாலையை ஸ்தம்பிக்க வைத்த 3 ஆயிரம் பெண்கள்: தொடரும் போராட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News