அரபிக்கடல் பகுதிக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் -IMC

அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க தமிழக, புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 14, 2018, 11:21 AM IST
அரபிக்கடல் பகுதிக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் -IMC title=

அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க தமிழக, புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...! 

தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை வரும் நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வங்கக் கடலில் உருவான காற்றமுத்த தாழ்வு நிலை, டிட்லி புயலாக மாறி ஒடிசா நோக்கிச் சென்றதால், தமிழகத்தில் பருவமழை தொடங்கிவில்லை. இருப்பினும் தமிழகத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் காற்றின் திசை மாறிய பிறகு, வரும் 15 ஆம் தேதி (நாளை) அளவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க தமிழக, புதுச்சேரி மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

 

Trending News