வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை!!

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 100 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 

Last Updated : Oct 25, 2018, 10:28 AM IST
வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை!! title=

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 100 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 

 

 

 

 

இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை வி.வி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 100 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் உரிமையாளர் வைகுண்டராஜன், அவரது மகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமானவரி செலுத்தாத காரணத்தால் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Trending News