Suicide Attempt: காதலித்து கர்ப்பமானதால் தற்கொலைக்கு முயன்ற ஐஐடி மாணவி; குழந்தை மரணம்

காதலித்து கர்ப்பமானதால் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து ஐஐடி மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்டார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2021, 01:16 PM IST
  • ஐஐடி மாணவி தற்கொலை முயற்சி
  • காதலித்து கர்ப்பமானதால் சிக்கல்
  • தற்கொலை முயற்சியில் குழந்தை மரணம்
Suicide Attempt: காதலித்து கர்ப்பமானதால் தற்கொலைக்கு முயன்ற ஐஐடி மாணவி; குழந்தை மரணம் title=

சென்னை: காதலித்து கர்ப்பமானதால் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து ஐஐடி மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்டார்

இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன், தனது மனைவி சாவித்திரி மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். 53 வயதான ராஜேந்திரன் சினிமா துறையில் லைட் மேனாக வேலை செய்து வருகிறார். 

சென்னை கிண்டியில் உள்ள ஐடிஐ யில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் 21 வயது மாணவியான ராஜேந்திரனின் மகள், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

Also Read | திருவெறும்பூர் அருகே வாலிபர் பழிக்கு பழி வெட்டி கொலை!

காதல் வயப்பட்ட அந்தப் பெண் எட்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். நேற்று இரவு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த முயற்சியில் சம்பவ இடத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. 

இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. உடனே அந்த மாணவியையும், குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலமாக கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, மருத்துவரின் ஆலோசனைப்படி, மாணவி, மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், இறந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தை கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 316 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read | கணவரை கொல்ல தீட்டிய சதி திட்டம் அம்பலமானதால் மனைவி தற்கொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News