அதிமுக-வில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. ஒற்றைத் தலைமையாக தான் அரியாசனத்தில் அமர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். முடியாது., இரட்டைத் தலைமை முறையே நீடிக்கட்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பொதுக்குழுவை ஜூன் 23ஆம் தேதி கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தினை நடத்தக் கூடாது என பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் நீதிமன்றத்தில் அளித்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
விசாரணையின்போது கட்சியினரிடம் கலந்து ஆலோசிக்காமல் ஒற்றைத் தலைமை விவாதங்கள் தொடங்கியுள்ளதாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் குறிப்பிட்டு பேசினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலம் இருக்கும்போது இப்போதே அதனை கலைத்துவிட்டு ஒற்றைத் தலைமையை தேர்ந்தெடுக்கும் முயற்சிகள் நடப்பதாக சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்.
மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது - ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பி.எஸ். மனு
பொதுக்குழுவை நடத்த ஆட்சேபனை இல்லை என்றும் ஆனால் கூட்டத்தில் தலைமை மாற்றுவது குறித்த திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் சண்முகம் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். அப்போது நீதிமன்றத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், நாளை நடக்கவிருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கான தீர்மான நகல் தற்போதுதான் தனது கைக்கே கிடைத்ததாக வாதாடினார். ஆனால் எக்காலத்திலும் கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட மாட்டேன் என்று ஓபிஎஸ் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பொதுக்குழு கூட்டத்தில் திருத்தம் நடக்கவும் செய்யலாம், நடக்காமலும் போகலாம் என்று பதிலளித்தனர். பொதுக்குழுவின் கருத்துக்கு மரியாதை அளிப்பதே ஜனநாயகம் என்று அவர்கள் வாதம் செய்தனர். மேலும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் எடப்பாடி தரப்பினர் வாதம் செய்தனர்.
மேலும் படிக்க | Draupadi Murmu: யார் இந்த திரெளபதி முர்மு: பாஜக ஜனாதிபதி வேட்பாளரின் பின்னணி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR