சொத்து குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் தப்பியது எப்படி?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்காமல் தப்பித்த காரணத்தால் இப்போது டிடிவி தினகரன் அதிமுக-வின் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Last Updated : Feb 16, 2017, 09:01 AM IST
சொத்து குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் தப்பியது எப்படி? title=

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்காமல் தப்பித்த காரணத்தால் இப்போது டிடிவி தினகரன் அதிமுக-வின் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

போயஸ் தோட்டத்தில் இருந்த டிடிவி தினகரன் மட்டும் இந்த வழக்கில் இருந்து தப்பியது எப்படி என்று விசாரணை அதிகாரி நல்லமநாயுடு கூறியுள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

சொத்துக்குவிப்பு வழக்கின் 21 ஆண்டுகால பயணம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். இந்த வழக்கில் இப்போது துணை பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரனும் சேர்க்கப்பட்டு இருந்தார். 

லண்டனில் அவர் சொத்துக்களை வாங்கி இருந்தார். இது பற்றி விசாரிக்க நேரடியாகவே லண்டன் சென்று ஆவணங்களை சேகரித்து வந்தார் நல்லமநாயுடு. டிடிவி தினகரனை சேர்த்ததன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தாமதமாகவே அவரை தனியாக பிரித்து விட்டோம் என்று கூறியுள்ளார் நல்லமநாயுடு. 

இதன் காரணமாகவே அவர் தண்டனையில் இருந்து தப்பியுள்ளார். இப்போது அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அதிமுக கட்சியை வழிநடத்த இருக்கும் தினகரன் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் மீது பல வழக்குகளில் விசாரணை இன்னும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News