மீண்டும் குதிரைப் பந்தயம் : பரிசு எத்தனை லட்சம் தெரியுமா!

ஆண்டுக்கு 1 முறை நடைபெறும் இந்த மாபெரும் போட்டி சுழற்சி முறையில் 6 ஆண்டுக்கு ஒரு முறை சென்னையில் நடைபெறும்.

Written by - அதிரா ஆனந்த் | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 4, 2022, 03:03 PM IST
மீண்டும் குதிரைப் பந்தயம் : பரிசு எத்தனை லட்சம் தெரியுமா! title=

சென்னை: சென்னையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவின் மிகச்சிறந்த குதிரைகள் பங்கெடுக்கும் குதிரை பந்தயம் கிண்டி ரேஸ் கிளப்பில் துவங்கவுள்ளது. 

வெற்றி பெறும் குதிகரைகளுக்கான தங்கக்கோப்பைகள் தயாராக உள்ளன. ஆம், அதுவும் சென்னை மண்ணில் குதிரை ரேசில் குதிரைகள் இந்த தங்க கோப்பைகளுக்கு மின்னல் வேகத்தில் ஓட உள்ளன. 

இந்தியாவின் தலை சிறந்த குதிரைகள் பங்கேற்கும் மாபெரும் குதிரை ரேஸ் போட்டி சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் நாளை மறுதினம் தொடங்குகிறது. 

ஆண்டுக்கு 1 முறை நடைபெறும் இந்த மாபெரும் போட்டி சுழற்சி முறையில் 6 ஆண்டுக்கு ஒரு முறை சென்னையில் நடைபெறும். அதன் படி சென்னையில் வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற உள்ள குதிரை ரேஸ்  போட்டி குதிரை ரேஸ் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் இன்று சென்னை திருவான்மியூர் ஹாலிடே இன் ஹோட்டலில் போட்டியில் வெற்றிபெரும் குதிரைக்கான கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. 

17 கிலோ வெள்ளியிலான கோப்பை போன்ற விததமான கோப்பைகள் அறிமுகம் செய்யப்பட்டன. குதிரை அச்சு பதியச்செய்து கோப்பைகள் காண்பவர்களை கவர்ந்தன.

மேலும் படிக்க | சமாதானம் ஆனார் ஓபிஎஸ்? அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து! 

கோப்பைகள் அறிமுக ஆன பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செட்டிநாடு குழும தலைவரும், மெட்ராஸ் ரேஸ் கிளப் தலைவருமான ஐயப்பன், " முன்னர் போல் தற்போது குதிரை பந்தையத்திற்கு ரசிகர்கள் இல்லை. கிரிக்கெட் போன்ற போட்டிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இருப்பினும் ரசிகர்களை ஈர்க்க சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் வளாகத்தில் குதிரை பந்தய போட்டி  நடைபெறுகிறது. இதில் சென்னை, மும்பை, கொல்கத்தா, மைசூர், உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து தலைசிறந்த குதிரைகளும், வீரர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறும் குதிரைக்கு 17 கிலோ வெள்ளியிலான கோப்பை பரிசளிக்கப்படுகிறது. 

வெற்றிப்பெறும் குதிரைக்கு 49 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், கோப்பையும் பரிசாக அளிக்கப்படுகிறது. மொத்தமாக நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் பரிசாக வழங்கப்படவுள்ளது. அனைத்திற்கும் விளம்பரதாரர்களும் உள்ளனர் "
 என்று தெரிவித்தார்.

குதிரை பந்தயம் என்பது பலருக்கு ஆர்வமுள்ள ஒரு போட்டியாகும். தற்போது இதற்கான ஆர்வம் குறைந்துள்ள போதிலும், இதன் பரம ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சென்னையில் நடக்கவுள்ள குதிரை பந்தயத்துக்காக குதிரை ரேஸ் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

மேலும் படிக்க | ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் மக்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News