கமல்-ன் அரசியல் பயணத்திற்கு எழுந்தது முதல் எதிர்ப்பு!

நடிகர் கமலஹாசன் அரசியல் பயணத்தினை ராமேஸ்ரம் தொடங்குவது தொடர்பாக எதிர்பு தெரிவித்து ராமேஸ்வரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Feb 20, 2018, 04:13 PM IST
கமல்-ன் அரசியல் பயணத்திற்கு எழுந்தது முதல் எதிர்ப்பு! title=

நடிகர் கமலஹாசன் அரசியல் பயணத்தினை ராமேஸ்ரம் தொடங்குவது தொடர்பாக எதிர்பு தெரிவித்து ராமேஸ்வரம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது!

வரும் பிப்.,21 அன்று தனது அரசியல் பயணத்தினை ராமேஸ்வரம் அப்துல் கலாம் ஐயா அவர்களின் வீட்டில் இருந்து துவங்கவுள்ளார் நடிகர் கமலஹாசன். இந்த பயணத்தின் போது அப்துல் கலாம் ஐயா அவர்கள் படித்த பள்ளிக்கு செல்லவுள்ளதாகவும் அவரது பயண விவரம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் கலாம் அவர்கள் படித்த பள்ளியின் மீது அரசியல் சாயம் பூசவேண்டாம் என கோரி, ராமேஸ்வரம் மாநிலம் இந்து முன்னணி மாநில தலைவர் ரமேஸ்வரம் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். 

முன்னதாக, தனது அரசியல் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தமிழக தலைவர்கள் பலரையும் சந்தித்து வருகின்றார்.

நாளை நடைப்பெறவுள்ள மதுரை மாநாட்டில் கமல் தனது அரசியல் கட்சி பெயரையும், கொடியையும் தெரியப்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News