பாஜகவுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி! CAAவை வரவேற்கும் இந்து மக்கள் கட்சி!

Citizenship Amendment Act : CAA சட்டத்தால் இந்திய அல்லது தமிழக இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படுவதாக நிரூபித்தால் ஒரு கோடி பரிசு அறிவிப்பதாக சவால் விடும் அர்ஜூன் சம்பத்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 12, 2024, 06:28 PM IST
  • CAA விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு அடிப்படை அறிவு இல்லை
  • திமுக அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் அதிரடி அர்ஜூன் சம்பத்
  • வேலூரில் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் பேட்டி
பாஜகவுக்கு 40 தொகுதிகளிலும் வெற்றி! CAAவை வரவேற்கும் இந்து மக்கள் கட்சி! title=

சென்னை: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறக்கோரி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் சென்று அங்குள்ள கோவில்களில் செங்கோலை முன்னிறுத்தி சிறப்பு வழிபாடு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஷ்வரர் ஆலயத்தின் வழிபாடு நடத்திய அர்ஜூன் சம்பத், பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், மத்திய அரசு கொண்டு வந்த CAA சட்டத்தை நான் வரவேற்க்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் இந்த சட்டத்தால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை என்று உறுதிபட கூறினார்.

CAA வால் எந்த இசுலாமியருக்கு பாதிப்பு?

புதியதாக கட்சி துவங்கியுள்ள ஜோசப் விஜய்,அரசியல் அடிப்படை அறிவு கூட இல்லாமல் CAA பற்றி கருத்து கூறுகிறார் என்றும் அவருக்கு யார் எழுதி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பினார். கிருஸ்தவ மாஃபியாக்கள் தான் விஜய் கட்சியை வழிநடத்துகிறார்கள். விஜயின் அறிக்கையை நான் கண்டிக்கிறேன் என்று, புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்தார்.

இலங்கை தமிழர்கள் பற்றி அர்ஜூன் சம்பத்

இலங்கைத் தமிழர்கள் நமது தொப்புலள்கொடி உறவுகள். அவர்களுக்கு இங்கேயே குடியுரிமை கொடுப்பதால் பாதிக்கப்படுவார்கள். வேண்டுமானால் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுக்கலாம், அது அவர்களுக்கு நல்லது என்பதால், இலங்கை தமிழர்கள் தொடர்பாக பாஜகவிடம் வலியுறுத்துவோம் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

மேலும் படிக்க | மத சிறுபான்மையினரை இந்தியர்களாக அங்கீகாரம் அளிக்கும் இந்தியா! திருத்தப்பட்டது குடியுரிமை சட்டம்!

பாஜக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற சிறப்பு பூஜை

தமிழகத்தில் பாஜக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வருகிறேன் என்று தெரிவித்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போதை மாஃபியா, லாட்டரி மாஃபியா மற்றும் சாராய மாஃபியா போன்றவர்களின் பணத்தில் திமுக தான் தேர்தலில் சந்திக்க போகிறது. அதனால் தான் திமுக இப்போதே பணத்தை பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று திமுக மேல் குற்றப் பத்திரிகை வாசித்தார் அர்ஜூன் சம்பத்.

மேலும், தமிழகத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் திமுக ஆட்சியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திராவிட மாடலை நாம் முறியடிக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கேட்டுக் கொண்டார்.

மோடிக்கு ஆதரவாக தமிழகத்தில் எங்கள் இரண்டு லட்சம் தொண்டர்கள் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்கள் என்று கூறிய  இந்து மக்கள் கட்சி தலைவர், CAA வால் இந்திய அல்லது தமிழக இசுலாமியர்களின் குடியுரிமை பாதிக்கிறதா? என யாராவது நிருபித்தால் ஒரு கோடி பரிசு கொடுக்கிறேன் என கூறினார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது, தேர்தலில் பணம் விளையாடியதால் வேலூரில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது என்றும், மணல் கொள்ளையில் கிடைத்த பணத்தை வைத்து தான் திமுக கதிர் ஆனந்த் தேர்தலை சந்திக்கிறார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜின் சம்பத் கூறினார்.

மேலும் படிக்க | பிரதமர் போட்ட பதிவு... கலாய்த்த சுப்பிரமணிய சுவாமி! - அரசியல் களத்தில் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News