தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Last Updated : Oct 26, 2019, 04:26 PM IST
தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்! title=

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வடகிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ள நிலையில்., கியார் ( KYARR ) என பெயரிடப்பட்டுள்ள புயல் மும்பையில் இருந்து 380 கிலோ மீட்டர் தென்மேற்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் ஒமனை அடையும் என்றும் புயலால் மும்பை, கோவா கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வடகிழக்கு பருவமழையால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில்., ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேக கூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 32 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

சென்னையில் நேற்று காலை முதலே மேக மூட்டமாகக் காணப்பட்ட நிலையில் இரவில் மழை கனமழையாக உருவெடுத்தது. நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை காலை வரை நீடித்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News