தமிழர்களின் இட்லி, தோசை, வடை அனைத்தும் எனக்கு பிடிக்கும்: மோடி

தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது; தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பேச்சு!!

Last Updated : Sep 30, 2019, 11:14 AM IST
தமிழர்களின் இட்லி, தோசை, வடை அனைத்தும் எனக்கு பிடிக்கும்: மோடி title=

தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது; தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பேச்சு!!

தகவல் தொழில் நுட்பத்தில் எதிர்கால சவால்களை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகியவை இணைந்து மாணவர்களுக்கான ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து, மாணவர்கள் மத்தியில் உரையாடிய பிரதமர் மோடி பேசுகையில்; தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது; தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னையின் காலை உணவு உற்சாகம் அளிக்கக் கூடியது. ஹேக்கத்தான் வெற்றிக்கும் உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சருக்கு எனது நன்றி. 

ஒவ்வொருவரும் ஒரு வெற்றியாளர்கள் தான். இந்திய மாணவ நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என்னை பொறுத்தவரை நீங்கள் அனைவருமே வெற்றியாளர்கள் தான். ஏனென்றால் பல சவால்களை சந்திக்கிறீர்கள். பல நாடுகளின் மாணவர்களின் யோசனைகளை பரிமாறிக் கொள்ள ஹேக்கத்தான் உதவுகிறது. சிங்கப்பூர் தொடர்ந்து இந்தியாவுடன் பணியாற்ற வேண்டும்.பல சவால்களை சரி செய்ய கடந்த 36 மணி நேரமாக நீங்கள் பணியாற்றி உள்ளீர்கள். உங்கள் பணியில் உள்ள சிறப்பினை காண்கிறேன். உங்களுக்கும் உங்கள் ஆற்றலுக்கும் வாழ்த்துக்கள். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு. 

இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. சிங்கப்பூரை போல, பிற ஆசிய நாடுகளுடன் இணைந்து ஹேக்கத்தான் போட்டிகளை நடத்த ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னை மிகச்சிறந்த கலாச்சாரம், மாபெரும் பாரம்பரியம், சிறந்த உணவு வகைகளை கொண்டது. மாமல்லபுரம் மிகச்சிறந்த தொன்மையான சிற்பங்களை கொண்ட நகரம். இவ்வாறு மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் IIT வளாகத்தில் உள்ள 'இந்தியா - சிங்கப்பூர் ஹேக்கத்தான்' கண்காட்சியை பார்வையிட்டார். அவரிடம் கண்காட்சி குறித்து மாணவர்கள் விளக்கமளித்தனர். 

 

Trending News