தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை சட்டப்பேரவையில் பாராட்டிய ஆளுநர்!

பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு ஆளுநர் உரையில் அறிவிப்பு. 

Last Updated : Jan 8, 2018, 11:59 AM IST
தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை சட்டப்பேரவையில் பாராட்டிய ஆளுநர்!  title=

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில் கூறியது:- "தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்ற கனவு நனவாக முயற்சி எடுக்கப்படும். 

கூட்டமைப்பு நிறுவனங்கள் தொடங்க 100 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மீதமுள்ள வழித்தடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்.  சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணிகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். 

திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை 16 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். நிலைத்த வளர்ச்சி இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு எய்த இயலும். பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்படும். நகர் புறங்களில் சுய உதவி குழுக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தூய்மை இந்தியா என்ற தேசிய குறிக்கோளை அரசு அடையும். நகர்ப்புறவளர்ச்சி திட்டமும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3.84 லட்சம் வீடு கட்ட இதுவரை ரூ.1,498 கோடி நிதியை மத்திய அரசு விடுத்துள்ளது" இவ்வாறு அவர் கூறினார். 

Trending News