Governor of Tamil Nadu RN Ravi: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கே.பொன்முடியை மீண்டும் மாநில அமைச்சரவையில் சேர்க்க மறுத்த ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் ஒரு நாள் கெடு விதித்ததை அடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று மாலை 3.30 மணிக்கு திமுக எம்.எல்.ஏ கே.பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்க திமுக தலைவர் பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளதாக அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
திமுக எம்.எல்.ஏ கே.பொன்முடி மாலை 3.30 மணிக்கு பதவி பிரமாணம்
திமுக எம்.எல்.ஏ கே.பொன்முடி பதவி பிரமாணம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை 3.30 மணி அளவில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பாரதியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது எனக் கூறப்பட்டு உள்ளது. அந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் உட்பட சிலர் கலந்துக்கொண்டு உள்ளனர். ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்றும், அங்கு வழங்கும் யூடியூப் லிங்க் மூலமாக பதவி பிரமாணத்தினை காணலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பொன்முடி, தனது எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது. இதையடுத்து இழந்த தனது எம்.எல்.ஏ. பதவியை பொன்முடி மீண்டும் பெற்றுள்ளார். அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோரிக்கை வைத்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒருநாள் கெடு விதித்த உச்ச நீதிமன்றம்
நேற்று வியாழன் அன்று, இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், "உச்ச நீதிமன்றம் தண்டனைக்கு தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என எப்படி உங்களால் கூறமுடியும்? இந்த வழக்கில் ஆளுநரின் நடத்தை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். இது முறையல்ல. ஏனென்றால் அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுகிறார். அரசியல் சாசனத்துக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடு உள்ளது. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். அவருக்கு அறிவுரை கூறியவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு சரியான அறிவுரை கூறவில்லை. உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்கும் போது, சட்டத்தின் படி செயல்பட வேண்டும் என்பதை ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டும். பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க நாளை ஒருநாள் அவகாசம் வழங்கப்படுகிறது "என தமிழக ஆளுநரை எச்சரித்தது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - பொன்முடி விவகாரம்... ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கெடு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ