அரசுப் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கே செலவு செய்ய வேண்டும்: கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

RTE Admission என்னும் பெயரில்  பலநூறு கோடிகளையும் பல்லாயிரம் மாணவர்களையும் தனியார் பள்ளிகளுக்குத்  தாரை வார்க்கும் நடைமுறையைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கல்வியாளர் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 19, 2022, 03:46 PM IST
  • தனியார் பள்ளிகளுக்குத் தாரை வார்க்கும் நடைமுறை
  • தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்
  • மாணவர்கள் இழக்கின்ற பேராபத்து
அரசுப் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கே செலவு செய்ய வேண்டும்: கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை title=

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அனைவருக்கும் கல்வி உரிமை என்ற சட்டத்தின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. 

சிறுபான்மை இல்லாத தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் ஏழை பெற்றோர்கள் ஏப்ரல் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இத்திட்டத்தின் படி கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

தனியார் பள்ளிகளில் உள்ள 1.12 லட்சம் இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவில் விண்ணப்பதாரர்கள் சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இப்பள்ளிகளில் 25% மாணவர்கள் படிக்கும் செலவைத் தமிழக அரசு வழங்கி வருகிறது.

மேலும் படிக்க |  இந்திய துணைக் கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக அரசு செலவு செய்ய வேண்டிய தேவை என்ன, அந்த நிதியை அரசுப் பள்ளிகளுக்குப் பயன்படுத்தினால் அரசுப் பள்ளிகளில் மிகுந்த தரத்துடன் செயல்பட வாய்ப்பாக அமையும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தற்போது இக்கருத்து மேலும் வலுப்பெற்றுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் சங்கமத்தின் நிறுவனர், ஆசிரியர் சிகரம் சதிஷ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் RTE Admission என்னும் பெயரில்  பலநூறு கோடிகளையும் பல்லாயிரம் மாணவர்களையும் தனியார் பள்ளிகளுக்குத்  தாரை வார்க்கும் நடைமுறையைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

கடந்த  சில ஆண்டுகளில் மட்டும் இதற்கென பல்லாயிரம் கோடிகளை அரசு வாரி இறைத்திருக்கின்றது. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பிற்கோ ஆசிரியர் நியமனத்திற்கோ, இந்தத் தொகையைப் பயன்படுத்தினால் அரசுப் பள்ளிகளின் தரம் எங்கோ உயர்ந்துவிடும். இது  நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டாலும், மத்திய அரசின் பல்வேறு முடிவுகளை துணிச்சலுடன் எதிர்க்கும் தமிழ்நாடு அரசு இதனையும் சரியான வழியில் அணுக வேண்டியது
அவசியமாகும்.

இதன் மூலம் தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை அதிகமாவதுடன், எதிர்காலத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடு, தமிழ்வழியில் படிக்கும் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடு போன்றவறையும் இதன் மூலம் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் இழக்கின்ற பேராபத்து இருக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அரசுப் பள்ளிகளை வளர்த்தெடுக்க பெருமுயற்சி எடுக்கும் தமிழ்நாடு அரசு இந்த விசயத்திலும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும் ஆகும்'' என்று சிகரம் சதிஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க |  குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கே இயற்கை எரிவாயு...தமிழக அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

 

 

 

Trending News