கூகுள் பங்கு மதிப்பு உயர்வால் சுந்தர் பிச்சைக்கு 2,524 கோடி!

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2,524 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளார்..! 

Last Updated : Apr 24, 2018, 12:31 PM IST
கூகுள் பங்கு மதிப்பு உயர்வால் சுந்தர் பிச்சைக்கு 2,524 கோடி! title=

கூகுள் பங்கு மதிப்பு உயர்வால் சுந்தர் பிச்சைக்கு 2,524 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது..! 

சென்னையை சேர்ந்த கூகுள் நிறுவன தலைவரான சுந்தர் பிச்சைக்கு கூகுள் பங்கு மதிப்பு உயர்வால் ரூ.2524 கோடி லாபம் கிடைத்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவராக பதவி உயர்வின் போது சுந்தர் பிச்சைக்கு பங்குகள் வழங்கப்பட்டது. 

அந்த பங்குகளின் மதிப்பு உயர்வால் அவருக்கு தற்போது ரூ.2524 கோடி கிடைத்துள்ளது.கடந்த 2015-ம் ஆண்டு கூகுள் தலைவராக இருந்த போது அந்நிறுவனமான ஆல்பெபெட் இங்க் சுமார் மூன்றரை லட்சம் பங்குகளை சுந்தர் பிச்சைக்கு வழங்கியது. அவருக்கு வழங்கப்பட்ட பங்குகளின் மதிப்பானது தற்போது 90 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

அவற்றின் தற்போதைய மதிப்பு உயர்ந்துள்ளதால் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு சுமார் ரூ.2524 கோடியாக உயர்ந்துள்ளது.

Trending News