கோவைக்கு பெருமை: ஈஷா யோகா மையத்தில் G20 - S20 மாநாடு!

கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் S20 என்ற அறிவியல் மாநாடு (Science 20 Meet) கோவை ஈஷா யோகா மையத்தில் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 21, 2023, 10:52 AM IST
  • சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்கள் களரிப் பயட்டு மற்றும் பரத நாட்டியத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரியத்தை பறைச்சாற்ற உள்ளனர்.
  • சத்குரு உடனான சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளனர்.
  • கோவை ஈஷா யோகா மையத்தில் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
கோவைக்கு பெருமை: ஈஷா யோகா மையத்தில் G20 - S20 மாநாடு! title=

கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் S20 என்ற அறிவியல் மாநாடு (Science 20 Meet) கோவை ஈஷா யோகா மையத்தில் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வல்லுநர்கள், சட்டம் இயற்றும் திறன் படைத்தவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் சத்குரு உடனான சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளனர்.

S20 குழுவில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகள் பசுமை எரிசக்தி, முழுமையான ஆரோக்கியம், சமூகத்துடன் அறிவியலை இணைப்பது போன்ற தலைப்புகளில் ஏற்கனவே மூன்று கூட்டங்களை நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ஈஷாவில் நடக்கும் கூட்டத்தில் முந்தைய நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொகுத்து அது குறித்து கலந்துரையாட உள்ளனர்.

ஈஷாவில் G20 மாநாடு நடக்க இருப்பது தொடர்பாக சத்குரு அவர்கள் கூறுகையில், “G20 கூட்டங்கள் ஆன்மீக மையம் உட்பட பல்வேறு விதமான இடங்களில் நடத்தப்படுவது மிகவும் சிறப்புக்குரியது. பாரதத்தை உணர்வதற்கு இது சிறந்த வழியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | யோகா ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது! யுனெஸ்கோவில் சத்குரு!

G20 பிரதிநிதிகளின் 2 நாள் சந்திப்பில் யோக அறிவியல் குறித்த கல்வி அமர்வும் இடம்பெற உள்ளது. இந்த அமர்வை ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் பேராசிரியரும், விழிப்புணர்வான உலகிற்கான சத்குரு மையத்தின் (Sadhguru Center for a Conscious planet) இயக்குநருமான டாக்டர் திரு. பாலசுப்பிரமணியம் நடத்த உள்ளார்.

மேலும், சர்வதேச பிரதிநிதிகள் ஈஷாவில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களான தியானலிங்கம், லிங்கபைரவி, தீர்த்த குண்டங்கள் ஆகிய இடங்களுக்கும் செல்ல உள்ளனர். சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்கள் களரிப் பயட்டு மற்றும் பரத நாட்டியத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரியத்தை பறைச்சாற்ற உள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதிநிதிகள் இன்று காலை முதலே ஈஷாவிற்கு வருகை தர தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் படிக்க |  தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News