முதல்வரை தொடர்ந்து அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் OPS...

அரசுமுறை பயணமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Nov 1, 2019, 10:27 AM IST
முதல்வரை தொடர்ந்து அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் OPS... title=

அரசுமுறை பயணமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ள நிலையில் தற்போது துணை முதல்வரும் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவின் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் பயணம் மேற்கொள்வார் என தெரிகிறது.

முதல்வரின் பயணத்தின் போது, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்த கொண்ட அவர் 55 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்து வந்தார். அவருடன் அமைச்சர்கள், தலைமைச் செயலக அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய துணை முதல்வர் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும், இந்த சுற்றுப்பயணம் 10 நாட்களுக்கு நீடிக்கும் எனவும்,  இந்த சுற்றுப்பயணத்திற்கு பின்னர் தமிழகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தில் பெரும் மாற்றம் நிகழும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அவர்களும் அமெரிக்காவுக்கு பயணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. துணை முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்து இரண்டொரு நாளில் அதிகாரிப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

முன்னதாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளார் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News