மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் பிரமாண்ட அளவில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடி மற்றும் பேனா வைக்கப்பட்டுள்ளது...!
தி.மு.க-வின் தலைவராக மு.க. ஸ்டாலின் இன்று ஒரு மனதாகத் தேர்வுசெய்யப்பட்டார். அண்ணா அறிவாலயத்தில் நடந்துகொண்டிருக்கும் தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில், தி.மு.க தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அண்ணா அறிவாலயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் திரண்டுள்ளனர். இதனால் அண்ணாசாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைவரானதைக் கொண்டாடும் வகையில், தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிவருகின்றனர்.
#Visual from M Karunanidhi's memorial at Chennai's Marina beach where MK Stalin will visit later today. Stalin has been elected as President of Dravida Munnetra Kazhagam (DMK). #TamilNadu pic.twitter.com/5lIjuSGsT4
— ANI (@ANI) August 28, 2018
தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின், பொதுக்குழுக் கூட்டம் முடிந்த பிறகு கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதைசெலுத்த உள்ளார். இதனால் கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், கருணாநிதி அதிகம் பயன்படுத்திய கறுப்பு நிறக் கண்ணாடி மற்றும் பேனா ஆகியவற்றின் பிரமாண்ட வடிவங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
#Visual from M Karunanidhi's memorial at Chennai's Marina beach where MK Stalin will visit later today. Stalin has been elected as President of Dravida Munnetra Kazhagam (DMK). #TamilNadu pic.twitter.com/5sm4xVkC3S
— ANI (@ANI) August 28, 2018