Saidai Duraisamy Son: சைதை துரைசாமி மகன் மாயம்...? சட்லஜ் ஆற்றில் விழுந்த கார் - விபத்து ஏற்பட்டது எப்படி?

Saidai Duraisamy Son Vetri Missing in Himachal Accident: சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி உள்பட 3 பேர் சென்றுகொண்டிருந்த இன்னோவா கார், ஹிமாச்சல் பிரதேசத்தில் சாலையில் இருந்து 200 மீட்டர் கீழே உள்ள சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.   

Written by - Sudharsan G | Last Updated : Feb 5, 2024, 12:18 PM IST
  • ஓட்டுநருடன் மொத்தம் மூன்று பேர் காரில் பயணித்துள்ளனர்.
  • இதில் கோபிநாத் என்ற நபர் மட்டும் படுகாயங்களுடன் மீட்பு.
  • ஓட்டுநரின் உடல் தற்போது கண்டறியப்பட்டது.
Saidai Duraisamy Son: சைதை துரைசாமி மகன் மாயம்...? சட்லஜ் ஆற்றில் விழுந்த கார் - விபத்து ஏற்பட்டது எப்படி? title=

Saidai Duraisamy Son Vetri Missing in Himachal Accident News in Tamil: இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் உள்ள பாங்கி நாலா அருகே தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாட்டின் இன்னோவா வாகனம் சட்லஜ் ஆற்றில் விழுந்து நேற்று விபத்துக்குள்ளானது. இதில் இருந்த இரண்டு பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒருவர் படுகாயமடைந்துடன் மீட்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. இதன் பின்னர், அவர் சிம்லாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் என மொத்தம் 3 பேர் பயணம் இருந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலா பயணிகளில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி என கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும், அவருடன் கோபிநாத் என்ற நபரும் சென்றுள்ளார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காரை ஓட்டிய நபர் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் தபோ மாவட்டத்தின் லாஹவுல்-ஸ்பிதி பகுதியை சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது. தற்போது, ஓட்டுநரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதன்மூலம், சைதை துரைசாமியின் மகனின் நிலை குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | இந்து மதத்தை தாக்கிய இஸ்லாமிய மதகுரு கைது! மும்பை காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஆதரவாளர்கள்

சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் கீழே சட்லஜ் ஆற்றில் இன்னோவா கார் விழுந்துள்ளது. நேற்று (பிப். 5) பிற்பகல் ஹிமாச்சல் மாநிலம் காசாவில் இருந்து சிம்லா நோக்கி இந்த கார் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. HP 01 AA என்ற பதிவு எண்ணுடனான அந்த இன்னோவா காரில் மூன்று பேர் சென்றதும் உறுதியாகியுள்ளது.

வாகனம் பாங்கி வாய்க்கால் அருகே கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாகனம் சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் கீழே சட்லஜ் ஆற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில், சட்லஜ் ஆற்றின் பலத்த நீரோட்டத்தில் ஓட்டுநரும்,  வெற்றி துரைசாமியும் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், கோபிநாத் மட்டும் ஆற்றங்கரையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், ரெக்காங் பியோ போலீசார், கியூஆர்டி மற்றும் ஊர்க்காவல் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக ரெக்காங் பியோ பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதே நேரத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், காணாமல் போன அவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காயமடைந்த கோபிநாத் சிம்லாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காணாமல் போனவர்களை சட்லஜ் ஆற்றங்கரையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இருப்பினும், தற்போது வரை அவர்களைப் பற்றி எதுவும் கிடைக்கவில்லை. 

குறிப்பாக, காணாமல் போனவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று டிஎஸ்பி தலைமையகமான நவீன் ஜல்டா ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,"காயமடைந்தவர்கள் முதலுதவிக்குப் பிறகு சிம்லாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று காலை காசாவில் வசிக்கும் டென்சின் என்ற டிரைவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

மேலும் படிக்க | இன்று நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News