சென்னை எண்ணூரில் தனியார் நிறுவனத்திற்கு கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கடலுக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலமாக கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிலோமீட்டர்கள் கசிவு காற்றில் கலந்து 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர பேருந்து மூலம் உடனடியாக வெளியேற்ற பட்டனர். மீதமுள்ள மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர், இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் நள்ளிரவில் அவதி, இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் எனும் நிறுவனம் திருவொற்றியூர் தாலுகா எர்ணாவூர் கிராமத்தில் உரத் தொழிற்சாலை ஒன்றையும், கத்திவாக்கம் கிராமத்தில் அம்மோனியா சேமிப்பு கிடங்கு ஒன்றையும் இயக்கி வருகிறது. இந்த ஆலைக்கு கடற்கரையில் இருந்து 2 முதல் 3கி.மீ. தொலைவில் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கடலுக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலமாக வருகிறது. இந்த குழாயில் ஏற்பட்ட கசிவு காற்றில் கலந்து சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் கடும் நெடியுடன் கூடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய சமுதாய நலக்கூடம் தேவாலயங்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் தேசராணி வயது 55 மற்றும் சந்தானம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை காப்பாற்றும் பணியில் 30-க்கும் மேற்பட்ட 108 அவசர உறுதி வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள், எனக்கு வாகனங்கள் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆவடி கமிஷனர் விஜயகுமார் ஐபிஎஸ் மக்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம் என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார். " யாரும் பீதியடைய தேவையில்லை. கேஸ் லீக் நிலைப்படுத்தப்பட்டது. எண்ணூரில் இனி வாயு (அமோனியா) கசிவு இல்லை. மக்கள் நிம்மதியடைந்து வீடு திரும்பினர். மருத்துவ மற்றும் போலீஸ் குழுக்கள் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
no need to panic.
stabilised. no more gas( ammonia) leak at ennore. people reassured and are back home. medical and police teams present. @avadipolice— Vijayakumar IPS (@vijaypnpa_ips) December 26, 2023
மேலும் படிக்க | டிஆர்பி ராஜாவுக்கு சவால் விடுகிறேன்.. ரெடியா என கேட்டு சொல்லுங்கள் - அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ