நூல் புரோக்கரின் அதிர்ச்சி வாக்குமூலம் - வீடியோ வெளியிட்டதும் தற்கொலை..!

லாட்டரியில் 62 லட்சம் ரூபாயை பறிகொடுத்த நூல் வியாபாரி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Gowtham Natarajan | Last Updated : May 14, 2022, 04:58 PM IST
  • 1ஆம் நம்பர் லாட்டரி சீட்டிற்கு அடிமை
  • ரூ62 லஞ்சத்தை பறிகொடுத்த நூல் வியாபாரி
  • வீடியோ வெளியிட்டு தற்கொலை - பரபரப்பு
நூல் புரோக்கரின் அதிர்ச்சி வாக்குமூலம் - வீடியோ வெளியிட்டதும் தற்கொலை..! title=
ஈரோடு எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். நூல் வியாபாரியான இவர் லாட்டரி பழக்கத்திற்கு அடிமையானவர். நூல் விற்று வரும் வருமானத்தின் பெரும்பகுதியை 1ஆம் நம்பர் லாட்டரி சீட்டு எழுதி செலவு செய்து வந்திருக்கிறார். இதனிடையே, நேற்று இரவு ராதாகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தெரிய வர சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். 
erode Nool broker,நூல் புரோக்கரின் அதிர்ச்சி வாக்குமூலம்
 
இதற்கிடையே, தற்கொலைக்கு முன் ராதாகிருஷ்ணன் பேசி வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்ற லாட்டரி ஏஜன்ட்டிடம் லாட்டரி வாங்கி இதுவரை 62 லட்ச ரூபாயை தான் இழந்துள்ளதாக ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். இதனால் ஏற்பட்ட வேதனையாலும் உயிருடன் இருந்தால் மேலும் அடிமையாகி விடுவேன் என்பதாலும் தற்கொலை செய்து கொள்ளவதாக அனைவரும் மன்னித்து விடும்படி வீடியோவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினரும் உறவினர்களும் போலீசில் புகாரளித்தனர்.
 
 
லாட்டரி ஏஜென்டிடம் இருந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக பணத்தை பெற்று தருமாறும், ஈரோட்டில் மறைமுகமாக நடந்து வரும் லாட்டரி சீட் தொழிலை ஒழிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் லாட்டரி ஏஜென்ட் செந்தில்குமார் திமுகவைச் சேர்ந்தவர் என்பதும், இவரது மனைவி கீதாஞ்சலி ஈரோடு மாநகராட்சி 39 வது வார்டு கவுன்சிலர் என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நீடித்து வருகிறது. 
 
 
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 
 

Trending News