'செந்தில் பாலாஜி ரூ 30 ஆயிரம் கோடி பற்றி சொல்லிடுவாரோ என ஸ்டாலினுக்கு பயம்' - இபிஎஸ்

EPS On Senthil Balaji Arrest: 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து ஏதாவது செந்தில் பாலாஜி பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் அனைவரும் சென்று பார்க்கின்றனர் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 14, 2023, 02:43 PM IST
  • செந்தில் பாலாஜி உத்தமர் போல் ஸ்டாலின் புலம்பி வருகிறார் - இபிஎஸ்
  • செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் ராஜினாமா செய்ய வேண்டும் - இபிஎஸ்
  • முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போட்டு வருகிறார் - இபிஎஸ்
'செந்தில் பாலாஜி ரூ 30 ஆயிரம் கோடி பற்றி சொல்லிடுவாரோ என ஸ்டாலினுக்கு பயம்' - இபிஎஸ் title=

Edappadi Palanisamy On Senthil Balaji Arrest: அதிமுக முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் இல்ல திருமண விழா திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இதில் எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

அதன்பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,"இது இப்போது நடந்த வழக்கல்ல. தொடர் நடவடிக்கையாக நடந்தது ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு விசாரிக்க தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஸ்டாலின் புலம்பல்

டாஸ்மாக்கில் 6 ஆயிரம் கடைகள் உள்ளது, 4 ஆயிரம் கடைக்கு டெண்டர் விடவில்லை. முறைகேடாக இரண்டு ஆண்டு காலமாக பார்கள் செயல்பட்டு வருகிறது. அரசுக்கு வர வேண்டிய வருவாய் திமுகவை சேர்ந்த மேல் மட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. முறைகேடாக நடைபெற்ற பாரில் போலி மதுபானம் கலால் வரி செலுத்தாமல் ஒரு குவாட்டருக்கு 100 ரூபாய் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

செந்தில் பாலாஜி உத்தமர் போல் ஸ்டாலின் புலம்பி வருகிறார். வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவும், வருமான வரித்துறையும் ரெய்டு நடத்துவதாக கூறி வருகிறார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசுவது ஒன்று, தற்போது பேசுவது வேறு. முதலமைச்சர் ஸ்டாலின் இரட்டை வேடம் போட்டு வருகிறார்.

மேலும் படிக்க | அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும் செந்தில் பாலாஜி..? அவர் பதவிக்கு வரும் அடுத்த அமைச்சர் இவரா?

அது என்ன ரூ. 30 ஆயிரம் கோடி?

30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து ஏதாவது செந்தில் பாலாஜி பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் அனைவரும் சென்று பார்க்கின்றனர். செந்தில்பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் தார்மீக பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும்" என பேசினார். 

அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் பிடிஆர் பழனிசாமி பேசியதாக வெளியான ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆட்சியமைத்த வெறும் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் சம்பாதித்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. அதை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக தெரிகிறது. 

17 மணிநேர சோதனை

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று அதிகாலை முதல் சுமார் 17 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் செந்தில் பாலாஜி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனே அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறினர். 

தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சையா?

தொடர்ந்து, அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அமைச்சரவையில் மாற்றமா?

செந்தில் பாலாஜி கைதை கண்டித்து நாளை மறுநாள் (ஜூன் 16), கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளதால், விரைவில் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் வரும் எனவும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | உதவி செய்ய வந்தவரை எட்டி உதைத்த செந்தில் பாலாஜி..! எக்ஸ்க்ளூசிவ் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News