தமிழகத்தில் புதிதாக பதிவான கொரோனா வழக்குகளில் 8 குழுந்தைகள் இடம்பெற்றுள்ளனர். இதில் 5 நாள் பெண் குழந்தை ஒருவரும் அடக்கம்.
செவ்வாயன்று தமிழகத்தில் மொத்தம் 121 கொரோனா தொற்றுகள் பதிவானது, இதில் சென்னையில் மட்டும் 103 தொற்றுகள் பதிவானது. இதையடுத்து மாநிலத்தின் எண்ணிக்கை இப்போது 2,058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை தொடர்ந்து 673 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.
அதேவேளையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 68 வயதான ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்தது. ஆனால் ஒரு கவலையான வளர்ச்சியில், செவ்வாய் அன்று பதிவான வழக்குகளில் எட்டு புதிய வழக்குகள் 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளை கொண்டுள்ளது. இதில் ஐந்து நாள் பெண் குழந்தை ஒன்றும் இடம்பெற்றுள்ளது வேதனையான விஷயம்.
புதிதாகப் பிறந்தவரின் தொடர்பு வரலாறு குறித்து, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “குழந்தை கன்டோன்மென்ட் போர்டு பொது மருத்துவமனையில் பிரசவிக்கப்பட்டது. குழந்தை பிறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, அம்மா காய்ச்சலுக்கு ஆளானார், பின்னர் அவரது மாதிரிகள் கொரோனாவிற்கு நேர்மறையான முடிவுகளை பெற்றது. இதனைத்தொடர்ந்து அவர் கீழ்பாக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர், குழந்தை பரிசோதிக்கப்பட்டது, குழந்தையின் சோதனை முடிவும் கொரோனாவுக்கு சாதகமாய் அமைந்தது" என குறிப்பிட்டுள்ளார்.
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் P வசந்தமணி கூறுகையில், “இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்காக தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறார். பால் ஊட்டிய பின்னர், ஒரு உதவியாளர் குழந்தையை கவனித்துக்கொள்கிறார்." என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய வழக்குகளை பொறுத்தவரையில் சென்னை தவிர, மற்ற நான்கு மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையை தவிர செங்கல்பட்டுவிலிருந்து 12, கள்ளக்குரிச்சியைச் சேர்ந்த மூன்று வழக்குகள், நமக்கலில் இருந்து இரண்டு மற்றும் காஞ்சீபுரத்தில் இருந்து ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. அதேவேளையில் 27 நோயாளிகள் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர் எனவும் அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.