அதிமுகவில் ஓபிஎஸ்ஸை ஓரங்கட்ட முழு மூச்சில் எடப்பாடி பழனிசாமி களமிறங்கியிருக்கிறார். சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை அனைவரும் வலியுறுத்த ஓபிஎஸ்ஸும், அவரது ஆதரவாளர்களும் பாதியிலேயே வெளியேறினார். அந்த சமயத்தில் அவர் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறின.
இதனையடுத்து டெல்லி சென்ற அவர் கட்சி விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் பேசியதாக தெரிகிறது. மேலும் அவர் தமிழ்நாடு முழுக்க நீதி கேட்டு சுற்றுப்பயணமும் மேற்கொள்ளவிருக்கிறார்.
இதற்கிடையே அதிமுகவின் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடக்கும் என்றும், அந்தப் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என கருதப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில், அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
முன்னதாக, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி 27.06.2022 அன்று நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என ஓபிஎஸ் கூறியிருந்தார்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி 27.06.2022 அன்று நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. pic.twitter.com/xYW9xAssBP
— O Panneerselvam (@OfficeOfOPS) June 26, 2022
ஆனால் இந்தக் கூட்டம் குறித்த அறிவிப்பில், தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஓ. பன்னீர்செல்வத்தின் போஸ்டரையும் இன்று சிலர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சுற்றுப் பயணத்தில் கைகோர்க்கும் ஓபிஎஸ் - சசிகலா? தேனியில் முக்கிய முடிவு
இக்கூட்டத்தில்,சி.வி.சண்முகம், கே.பி. முனுசாமி, செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார், வளர்மதி, மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR